பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பேர் வேண்டேன் 67 அமைச்சராகவே ஆக்கப்பெற்றார். அவர் அமைச்சராக வந்தபோது மற்ற அமைச்சர்கள் அவரைச் சாதாரண மாக எண்ணி இருப்பர். ஆனால் அவரோ, * அண்ணலரி மருத்தனுக்கு அடல்வாத வூரமைச்சர் கண்ணுமிகு கவசமுமபோல் காரியஞ் செய்து ஒழுகுவார். (திருவிளை. வாதவூரருக்கு உபதேசம் செய்த படலம், 9) ஆனார். மற்றும் இவர், ' கற்றறிந்தோர் ஆதலினாற் காவலற்குக் கண்போன்ற முற்றுணர்ந்த அமைச்சரினும் முதல் அமைச்ச ராய்த் திகழ்வார்' ஆனார். இந்த நிலை மற்றவர் உள்ளத்திலே பொறாமைக் கனலை மூட்டிவிட்டது. வாதவூரர் இல்லையானால் அரசன் வாழ்வு இல்லை என்னும் நிலை உண்டாகவே, பிற அமைச் சர்கள் பொறாமைப் பட்டனர். எனவே இவரைத் தாழ்த்த வழிகளை யெல்லாம் ஆராய்ந்து இருட் பர். வா தவூரர் தம் கடமைகளைத் தவறாது செய்து அரசனுக்கு உகந்தவரானவர் போலவே அன்பு நெறியால் ஆண்டவனுக்கும் உகந்தவரானார்; அதில் சற்று வேக மாகவே சென்றார் என்று கூறலாம். அரசனுக்குக் கண் ணும் கவசமுமாக இருந்து அவன் வாழ்வில் கருத்திருத்தித் தன் வாழ்வையே மறந்தார். அதே வேளையில் அரசனுடைய பொருளுக்கும் தன் பொருளுக்கும் வேறுபாடு காணவில்லை அவர்; அனைத்தும் ஆண்டவன் பணிக்கு உரியவை என நினைத்திருப்பார். அரசனும் ஆண்டவனிடம் மெய்யன் புடையவன் என்பதை அறிவார். அரசனும் தன் கடன் வழுவா நிலையில், கடவுட் பணியைப் போற்றும் அவரை மற்றவர் அனைவரினும் சிறந்தவராகவே கொண்டான். எனவே, அவரையே அழைத்துக் குதிரை வாங்கி வரப் பெரும் பொருள் கொடுத்து அனுப்பினான்.