பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பேர் வேண்டேன் 69 எனப் பரஞ்சோதியார் காட்டினார். திருப்பெருந்துறை யில் அமைச்சர் வாதவூரர் செய்கை அனைத்தையும் காவலர் மூலங் கேட்டறிந்த அரசன் வாளா இருந் தனன் என்றால் பொருள் என்ன? உடனே ஆள் அனுப்பி அவரைத் தகைந்திருக்கலாம். செய்யவில்லை; அது தக்க தென அவன் இருந்தான். அரசன் வாளா இருந்த போது வாதவூரர் மேல் பொறாமையுற்றார் பலர். அவரோடு உடன் இருந்த அமைச்சரும் அவருடைய சுற்றத்தாரும் வாளா இருக்க வில்லை; பலவாறு பழித்துரைத்தார்கள் என்பதைப் பரஞ்சோதியார் பலவிடங்களில் காட்டுகின்றார். அவர் உள்ளப் புகைச்சலுக்கு அதுவே சான்றாகும். அதுவும் வாதவூரருக்குப் பரிந்து பேசுவது போலவே அமைகின்றன அவர் தம் சொற்கள் : * தழுவிய கிளைஞர் நட்டோர் சார்ந்துளோர் தக்க சான்றோர் குழுவினைக் காக்கவேண்டும் குறிப்பிலீர் போலும் நீவிர் (28) என அவர்கள் அவர் சுற்றம் தழுவவேண்டிய கடமையை உணர்த்துவது போன்று தமது உள்ளத்தைக் காட்டி விட்டனர். இன்னும் சில பாடல்களிலே பரஞ்சோதியார் அவர் தம் பொறாமை உள்ளத்தைக் காட்டுகின்றார். எனினும், வாதவூரர் அதற்கெல்லாம் கவலையுறாது இறை வனிடம் நீங்காத சிந்தை வைத்து நிலைத்திருந்தார். பின்னர், நரி பரியாயதும் பரி நரியாயதும் நடை பெற்ற நிகழ்ச்சிகள். இவற்றைக் கண்ட பின் பாண்டியன் ஒருவேளை சீற்றம் கொண்டிருப்பான். அச்சீற்றத்தை வாதவூரர் புகழ்கண்டு பொருமிய உள்ளங்கள் வளர்த் திருக்கும்; அதன் எல்லையில் பாண்டியன் வாய், கண்ணுமிகு கவசமும் போல் காரியம் செய்து ஒழுகியதும் காலம் பார்த்து எம் எண்ணரிய நிதியீட்டம் கவர்வதற்கோ நின் அமைச்சின் இயற்கை நன்றால் (பரி, நரி 43) கொ . ம. 3