பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பேர் வேண்டேன் 71 என்ற பெருமொழி உண்மைத் தொண்டாற்றுவார் ஒவ் வொருவரும் உள்ளத்தே கொள்ள வேண்டிய ஒரு நல் அருமொழியாகும். உலகு இன்று எங்கோ சென்று கொண்டிருக்கிறது. இந்த உலகில் வாழ்வாங்கு வாழ்பவர் மிகச்சிலர். அவ ருள்ளும் 'தனக்கென வாழாப் பிறர்க்குரி யாளராய்' உள்ளவர் மிகமிகச் சிலர். அவர் தம் உளத் தூய்மையும், அறிவுப் பணியும் அன்புத் தொண்டும் அவரை எப்படியோ உலகுக்கு அறிமுகம் செய்துவிடுகின்றன, அதனால் அவ்வாறு பெறாத மற்றவர் பொறாமை கொள்ள நேரிடு கிறது இந்த நிலை உண்மையில் வேண்டப்படாதது. சிலர் தமக்குப் புகழ் வேண்டும் வேண்டும் என முயன்று ஓடினும் அது எட்டாமல் ஓடுகிறது. சிலர் வேண்டேன் என ஒதுங்கினும் தாவிப் பிடிக்கிறது. ஆம்! 'புகழ் வேண்டா ' மாணிக்கவாசகர் தம் புகழ் இன்றும் வாழ் கிறது. அதைத் தகைக்க நினைத்த பிற அமைச்சர், அன்றி அரசன் புகழோ அன்றைக்கே அற்றுவிட்டது. எனவே புகழ் வேண்டாமென்றாலும் வந்தடைவதைத் தடுக்க முடியாது, என்றாலும் இன்றைய உலகில் புகழ் வேண் டாது ஒதுங்கி நின்று செய்யும் பணியைப் பெயர் இல் லாது செய்தல் தான் சிறந்த அறிவுடைமையாகும். அவ் வாறு செய்பவர்கள் என்றென்றும் வாழ்பவராவார்கள். அன்றி அப்போதே புகழ்தேட நினைப்பவர்கள் ஒருவேளை அவர் தம் ஆயுட்காலம் வரையில் புகழோடு வாழலாம். ஆனால் உலகமுள்ளளவும் வாழ இயலாதே. இதையே தான் எல்லாச்சமயங்களும் சொல்லுகின் றன. 'உன் வலது கை செய்வது இடதுகைக்குத் தெரியாதிருக்கட்டும்' என இயேசு இது குறித்துச் சொன்னார். உலகில் மனித னாகப் பிறந்து விட்டோம்; அதனால் நமக்குரிய கடமை இது என எண்ணிக் கடமைக்காகச் செயலாற்றுவதே