பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர்த்துன்பம் உன் துன்பம்* ஓரறிவுயிரிடத்தும் இரக்கம் காட்டுபவர் தமிழர்கள் . தொல்காப்பியர் காலந்தொடங்கி இன்றுவரை புல்லும் மரமும் பிறவும் உயிருள்ள பொருள்களே என்ற உண்மையை உணர்ந்து, 'எவ்வுயிரும் இறை யுயிரே' என்ற ஏற்றத்தில் அறம் பெருக்கி வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அனை மையில் தான் வங்க அறிஞர் வசு அவர்கள் மரம் செடிகளுக்கு உயிர் உண்டு என்று கண்டுபிடித்தார் என அவரைப் பாராட்டும் உலகம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அவ்வுண்மையை உணர்ந்து போற்றிய தமிழரைக் காண மறுப்பது ஏனோ? வையகம் வாழத் தான் வாழ்தலே சிறந்தது என்ற கொள்கை உடையவன் தமிழன். அந்த அடிப்படைக் கொள்கையில் நின்றே அன்று தொட்டு இன்று வரை அவன் வாழ்வு சிறந்து வருகின்றது. 'நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை' என்ற பழமொழியும், 'எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே - அல்லாமல் வேறொன் றறி யேன்' என்ற வேண்டுகோளும், இந்தக் கொள்கையின் அடிப்படையில் தோன்றியனவே, உலகில் தோன்றிய ஒவ்வொரு உயிரும் -ஆம்-புல் தொடங்கி மனிதன் வரைஉலக வாழ்வை வளம் பெறச் செய்வனவேயாம். உயிர் அளவில் அவற்றுக்குள் வேறுபாடு இல்லை யன்றோ! உலகத்தில் தோன்றி வாழும் உயிர்களுள் - அவை எந்த அளவு அறிவைப்பெற்றதாக இருந்தபோதிலும், அவற்றில் -

  • 'சோதி மலரில் வந்தது' (பிப்ரவரி 60)