பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

உயிர்த் துன்பம் உன் துன்பம் 17 | நீடிய பிணியால் வருந்துகின் றார் என் நேருறக் கண்டுளம் துடித்தேன்; ஈடில்மா னிகளாய் ஏழைகளாய்நெஞ்சு இளைத்தவர் தமைக்கண்டே இளைததேன். இந்த அறிவுரை அன்று தொட்டு -- தொல்காப்பியர் காலந் தொட்டு - இன்று வரை தமிழகத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது. உலகின் பல பாகங்களிலும் இதே உண்மை பல்வேறு தவஞானச் செல்வர்களால் உணர்த்தப்பட்டே வருகின்றது. என்றாலும், மனிதன் அதைப் பிடித்துக் கொண்டே-மற்றவர்களுக்கும் மற்ற வைகளுக்கும் விளக்கிக் கொண்டே- தான் மட்டும் எங்கேயோ ஓடிக் கொண்டிருக்கிறான்; பறக்கிறான். சந்திரனைத் தாண்டியும் அவன் விண்வழி உயர உயரப் பறக்கிறான். என்றாலும் உள்ளம் எங்கோ தாழத் தாழச் சென்று கொண்டே இருக்கிறது. இதை எண்ணிப் பார்ப் பின் உணர்வான். எண்ணவும் அவன் விரும்ப வில்லை. வள்ளலார் எண்ணச் சொல்லுகிறார். எண்ணி உண்மை யில் உள்ளத்து ஒளிபெறின் அவன் மனிதனாவான். அந் நாள் எந்நாளோ? புற இருளையும் அக இருளையும் ஒருங்கே போக்கி மனிதனை மனிதனாக வாழவைக்க இப் பூசப் பெரு நாள் வழி காட்டுவதாக! வாழ்க அறநெறி வளர்க சமரச உணர்வு!