பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமதர்மச் சமுாதயம்* இன்று உலகெங்கணும் மக்கள் சமதர்மக் கொள்கை உடையவர்களாக வாழ வேண்டும் என்று பேசப் பெறு கின்றது. சிறப்பாக நம் பாரத நாட்டில் இக் கொள்கை யைச் செயலளவில் பரப்ப இந்திய அரசாங்கமும் பொது மக்களும் விரும்புகின்றனர். கொள்கை மிகச் சிறந்தது தான். ஆனால் இது புதிய கொள்கையன்று. தமிழன் கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக இக் கொள்கையை வற்புறுத்தி வந்து கொண்டே இருக்கிறான். வெறும் பொருளில் மட்டுமன்றி. கல்வி, புகழ், அனைத்திலுமே அவன் சமதர்மத்தை நாடியிருக்கின்றான். இன்று பணத்தில் உயர்ந்தவரால் மட்டும் சமூகம் கெட்டுவிட வில்லை. அதிகமாகப் படித்துவிட்டோம் என்று எண்ணும் சிலராலும், புகழ் ஏணியின் உச்சியில் ஏறிவிட்டோம் என்று இறுமாக்கும் சிலராலும்கூடச் சமூகம் கெடு வதைக் காண்கின்றோம். ஒருவனை மற்றவனிடத்திலிருந்து வேறு படுத்தும் எதிலும் சமதர்மம் நிலவ வேண்டும் என்பதே தமிழன் கொள்கையாகும். ' கல்வி ஆங்காரம் துன்பம் கற்றில னாகில் துன்பம் மல்லன் மா ஞாலம் தன்னில் வலிமிகின் மதத்தால் துன்பம் என்று, பிற்கால அறிஞர் ஒருவர் கற்றதனாலும் வலிவுற்ற தனாலும் நாட்டுக்கு வரும் துன்பதை எடுத்துக் காட்டு கின்றார். ஆண்டவனைப் பாடவந்த அடியவர்களாகிய மணிவாசகரும் தாயுமானாரும் இக் கருத்தை எண்ணித் மதுரைச் சித்திரை விழா மலர்