பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வெற்றிக்கு வழி 'திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தீட்டப் பெறு கின்றன. பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் ஆண்டுதோறும் செலவு செய்யப் பெறுகின்றன. கடந்த பத்து ஆண்டுகளிலே இந்தியா செலவு செய்த பணம் மிகப் பெரிது; பயனோ மிகமிகச் சிறிது. 900 கோடி ரூபாய் விவசாயத்துக்காக இதுவரை செலவு செய்தும் பயன் ஒன்றும் காணவில்லை' என நேரு அவர்களே வாய் விட்டுப் பேசுகின்றார். ஆக்ராவில் சென்ற நவம்பர் (1959) 10.ஆம் தேதி திரு நேரு அவர்கள் பேசியபோது இதைக் குறிப்பிட் டார்கள். உலகில் எந்த நாட்டிலும் செலவிடப்படாத வகையில் விவசாயத்துக்கு இந்தியா 900 கோடி ரூபாயைச் செலவிட்டது. எங்கோ ஒருசில மூலைகளில் ஓரளவு பயன் காணப் பெரினும் பொதுவாக எதிர்பார்த்த பயன் இல்லை எனலாம். காரணம் என்ன? பணம் எங்கே மறைந்தது? யாராவது தின்று விட்டார்களா? இல்லை. அது சரியாகப் பயன்படுத்தப் பெறவில்லை. 'மேலே ஆளும் கணத்தார் நல் எண்ணத்தோடு திட்டங்களை உருவாக்க, அவற்றைக் கீழே செயல்படுத்தும் பொறுப்பாளர் சரிவர நிறைவேற்ற வில்லை' என்று நேரு அவர்கள் வருத்தத் தோடு கூறுகின்றார்கள். செலவுத் தொகை ஒன்றிரண் டல்ல; பல ஆயிரம் கோடிகள் : அவை சரியாகச் செலவு செய்யப் படவில்லை என்றும் தெரிகிறது. தெரிந்தும், எங்கே சரியாக நடைபெறவில்லை என அறிந்தும் அதைத் துடைக்க அரசாங்கம் முன் வரவில்லை என்றால், காரணம் என்ன? | கொ . ம. 6