பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

86 கொய்த மலர்கள் சென்னையில் ஒரு கூட்டத்தில் திரு காமராசர் அவர் கள் வீடுகட்டும் திட்டம் பற்றிப் பேசினார்கள். அதில் • அரசாங்கம் வீட்டில்லாதவர்களுக்கு உதவ வீடு கட்டித் தருகிறார்கள். குறைந்த வட்டியில் பணம் கொடுத்து வீடுகள் கட்டப் பெறுகின்றன. ஆனால், பலர் அவற்றை வாடகைக்கு விட்டு விடுகிறார்கள். சிலர் நல்ல விலைக்கு விற்று விடுகிறார்கள்' எனக் குறைபட்டார்கள். ஏன் அப்படிக் குறைப்பட வேண்டும்? நேரு அவர்கள் கீழ்உள்ள உத்தியோகஸ்தர்கள் மேல் குறை கூறுகிறார்; காமராசர் மக்கள் மேல் குறை கூறுகின்றார். ஆகவே இருவருக்கும் குற்றம் கடக்கும் இடம் தெரிந்தே இருக்கிறது. தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத காரணம் என்ன? கீழ் உள்ள மாவட்ட அதிகாரிகள் தங்கள் வேலையை ஊர்தோறும் நேரில் சென்று பார்வையிட்டுச் செய்ய வில்லை என நேரு குறைப்படுகிறார்கள். உண்மை , ஆனால் அவர்களுக்கு ஓய்வு எங்கே இருக்கிறது? அவ்வப்போது வரும் மாநில மத்திய அமைச்சர்களோடு இருக்கவும். வெளி நாட்டாருக்கு வழிகாட்டவும் அவர்களுக்கெல்லாம் ஏற்பாடு செய்யவுமே அவர்தம் பெரும்பாலான நேரம் கழிகிறது. எதற்காக அவர்கள் இருக்கிறார்களோ, அதற்காக அவர்கள் தொழில்பட முடிவதில்லை. மக்கள் வாழ்வை வளமாக்குவதே அவர்கள் பணி. ஆனால் மேலிடத் திலிருந்து வருபவர்கள் அவர்களைத் தங்களோடு இருக்கச் செய்து மக்களோடு தொடர்பு கொள்வதைத் தடுக்கிறார்கள். திங்களுக்கு ஏழெட்டுத் தடையாவது மந்திரிமார் வந்து வந்து சென்று கொண்டிருக்கிறார்கள். வெளி நாட்டுப் பயணக்கோட்டியார் பலர். இவர்களுக்கு இடையில் அவர்கள் தமது பணிகளைக் கவனிப்பது எங்கே ? நிற்க, இவ்வாறு விவசாயத்துக்குச் செலவிடும் பணம் வீணாகும் காரணத்தைக் காபி போர்டு தலைவர் விளக்கிக்