பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

198 கொய்த மலர்கள் முனைந்து விட்டனர். இந்த ஆசையெல்லாம் யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும் உறங்குவதுமாக முடியும்" என்கிறார் அவர். ஆம். இதற்காக இத்தனை எல்லைப் போராட்டமா? தம் நாடு வாழப் பிற நாட்டைச் சுரண்டிநசுக்கி-ஆணை செலுத்துவதா? அதற்கு நாகரிகம் என்று பெயரா? இந்தக் கொடுமை நீங்கத் தாயுமானவர் காட்டும் வழி 'உள்ளதே போதும்' என்ற உணர்வுதான். இந்தத் தமிழனுடைய உணர்வு வல்லரசுகள் உள்ளத்தில் முளைக்க வேண்டும்: முளைக்குமா? தமிழன் இந்த உணர்வோடு 'செல் விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருக்கும்' பண்பில் தன் நாட்டில் தான் வாடினும் மற்றவர்களை யெல்லாய் 'வருக' என வரவேற்ற. இன்றும் அவர்களை நன்கு வாழவிடுகின்றான், ஆனால் இந்தியாவின் பிற பகுதிகளிலோ உலக அரங்கிலோ இந்த வேறுபாட்டு உணர்வு மறையவில்லை என்பதை அன்றாட நிகழ்ச்சிகள் காட்டுகின்றன. இந்த எல்லைப் போராட்டம், தனி மனிதனுக்காயினும் சரி- வல்லரசு களுக்காயினும் சரி - என்று இல்லையோ அன்று தான் நாடும் உலகும் நாமும் வாழ்வோம். அதற்கு வழி காட்டக் கணியன் பூங்குன்றன் நேரில் தான் வரவேண்டும் போலும்! தாயுமானவர் மறுபடியும் தோன்றத்தான் வேண்டும் போலும்!