பக்கம்:கொய்த மலர்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் காட்டிய காதல் நெறி 107 திருவள்ளுவர் காமத்துப் பாலில் 250 குறட்பாக்களே 500 வரிகளே-பாடியுள்ளார். ஒவ்வொரு பாட்டும் மக்கள் உள்ளத்தை மகிழ்விப்பதாகும். ஒருவனும் ஒருத்தியும் உள்ளத்தால் மகிழ்வதே காமமாகும். காமம் தெய்வத் தன்மை பொருந்தியது. தமிழில் மட்டுமன்றிப் பிறமொழி களிலும் காமத்தைப்பற்றிப் பலர் எழுதியுள்ளார்கள். எனினும் வள்ளுவர் போன்று அதன் மென்மையையும் அதைப் பெற்றுத் துய்ப்பவரின் தன்மையையும் யாரும் விளக்கவில்லை. காமம் மலரைக் காட்டிலும் மென்மை யுடையது என்கிருர் அவர். ஆம்! மலர் கண்டால் இனிமை பயப்பது. தூரத்தே இருந்தாலும் மணம் வீசி மகிழ்விப்பது. தொட்டால் மென்மையாக நலம் பயப்பது. தாகை இயல்பாக மலர்வது. தூய்மை உடையது. ஆம்? காதலும் அத்தகையதே. தலைவன் தலைவியர் இருவரும் மாரு இன்பத்தை-கண்டு, கேட்டு, உண்டு. உயிர்த்து, உற்று அறியும் ஐம்புலன்களும் பெறும் இன்பத்தை-காதல் வழியே பெறுகின்றனர். காமம் அம் மலரைக் காட்டிலும் மென்மை உடையது என்கிருர் வள்ளுவர். அத்தகைய மென்மைவாய்ந்த பொருளைக் கையாளுபவர் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் அல்லவா? எத்தனையோ பேர் காதல், காமம் என்று கண்மூடி வீழ்ந்து வாழ்வதாக எண்ணிக் கெடுவதைக் கண்டிருக்கிருர் வள்ளுவர். மலரின் மென்மைத் தன்மை அறிந்து, அதைக் கசக்காமலும் வாடவிடாமலும் போற்றித் துய்த்தல் அறிவுடைமை. ஆம்! காமம் அதனினும் மென்மை உடையது. எனவே அக்காதல் வயப்பட்டு, அதன் கிலே கெடாது, அதல்ை தம் இன்பத்தை வளர்ப்பவர் நாட்டில் மிகமிகச் சிலரே யாவர். உலகில் எங்கும் காமம் என்றும் காதல் என்றும் பேசப்படினும், அதல்ை என்றும் மாரு இன்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/109&oldid=812319" இலிருந்து மீள்விக்கப்பட்டது