பக்கம்:கொய்த மலர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108° கொய்த மலர்கள் பெறுபவர் மிகச் சிலரே. இவற்றையெல்லாம் எண்ணித் தான் திருவள்ளுவர், மலரினும் மெல்லிது காமம், சிலர் அதன் - ီ|ိ င္တူရီနီ - 巴榜 (1289) எனக் காட்டுகின்ருர். இத்தகைய மென்மையான காமத்தின் தலை கிற்கும் காதலர் வாழ்வைப் பல கோணங்களில் படம் பிடித்துக் காட்டுகின்ருர் வள்ளுவர். இக்காலத்தில் கண்டதும் காமம்; உடனே விவாக ரத்து' என்று பேசப்படுவது போன்ற நாகரிகக் காமம் வள்ளுவர் காணுதது. அவர் காமவாழ்வு வழிவழியாகப் பலப்பல பிறவிகளில் தொடர்ந்து வருவது. வள்ளுவர் மறுபிறப்பில் கம்பிக்கை உள்ளவர். முன்னைப் பிறவிகளை எண்ணுபவர். எனவே இக்காதல் வாழ்வு திடீரென ஒரே பிறவியில் ஏற்பட்டு விட்டது என அவர் எண்ணவில்லை. இக் காமமாகிய கட்டு பல பிறவிகளில் ஒருவரை ஒருவர் பற்றி வருவ தாகக் காட்டுகின்ருர். இதை மிக நுணுக்கமாக அவர் விளக்கும் திறன் போற்றற்குரியது. ஒரு தலைவன் தலைவியின் உள்ளத்தை நிறைவித்து அவளுடன் கூடி மகிழ்கின்ருன். அந்த மகிழ்ச்சியில் அவளைப் போற்றிப் பாராட்டுகின்ருன். அவளே விட்டுப் பிரிய மனம் இல்லை அவனுக்கு. அவள், தான் மாறுபட்ட தாகக் கருதி ஒருவேளை புலத்தல் செய்வாளோ என அஞ்சு கிறது அவன் உள்ளம். எனவே, அவன் இந்தப் பிறவியில் கான் உன்னைப் பிரியமாட்டேன்' என்கின்ருன். உடனே "அவள் அழுதாள்’ எனக் குறிக்கின்ருன். ஏன் அழுதாள்? "அப்போது மறுமையில் பிரிந்து விடுவீர்களோ என எண்ணுகிறது அவள் உள்ளம். ஆகவே ஒருமுறை காதல் வயத்தால் கலந்த இருவர் இந்தப் பிறவியில் மட்டுமின்றி எந்தப் பிறவியிலும் பிரியாது வாழவேண்டும் என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/110&oldid=812324" இலிருந்து மீள்விக்கப்பட்டது