பக்கம்:கொய்த மலர்கள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் காட்டிய காதல் நெறி 109 வள்ளுவர் கருத்து. காதலைத் தெய்வத்தினும் மேலாக அவர் போற்றுவது இதல்ை நன்கு விளங்குகிறதன்ருே. இதோ அவர் வாக்கு: இம்மைப் பிறப்பில் பிரியலன் என்றேளுக் கண்நிறை நீர்கொண் டனள்' (1315) . இத்தகைய பண்பட்ட மாருத காமமே வள்ளுவர் காட்டும் காமமாகும். இதைத் தான் இந்த நூற்ருண்டில் வாழ்ந்த பாரதியார் கண்ணன் கண்ணம்மா காதல் பாட்டாக அமைத்து விளக்கிக் காட்டுகின்ருர். காதல் வாழ்வு வழிவழியாகத் தொடர்ந்து வருவது என்பது வள்ளுவர் உள்ளக்கிடக்கை யன்ருே அது பல பிறவி களில் பலவகையில் தொடர்ந்து வரும். அன்பால் பிணிக்கப்பட்ட ஒருயிராக எத்தனை எத்தனையோ பிறவி களில் சேர்ந்து வாழ்ந்த இருவர் மாறுபட்டுப் பிரிபவர் போன்று சிற்சில வேளைகளில் தெரியுமாயினும், பிறகு அவர்கள் பிணைந்தே விடுகின்றனர் என்பதையும். காட்டுகின்ருர். கண்ணன் கண்ணம்மாவைப் பார்த்துப் பாடும் காதல் பாட்டின் ஒரு பகுதி இது: சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திட்டேன்-அவர் சாத்திரம் சொல்வதை நினக் குரைப்பேன் நேற்று முன்ளிைன் வந்த உறவன்றடி-மிக நெடும் பண்டைக் காலமுதல் நேர்ந்து வந்ததாம் போற்றும் இராமனென முன்பு தித்தன பொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான் ஊற்றமு தென்ன உயர் வேய்ங் குழல் கொண்டாய் உலகம் நினக்கமையப் பார்த்தன் அங்கு நான். முன்னம்மிகப் பழைமை இரணியன் நான் - மூர்க்கம் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ பின்ைெரு புத்தனென நீ வளர்ந்திட்டாய் பெண்மை அசோதரை என்றுன்னை கண்ணினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/111&oldid=812325" இலிருந்து மீள்விக்கப்பட்டது