பக்கம்:கொய்த மலர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் காட்டிய காதல் நெறி 124 ஒவ்வொரு குறளினும் புலவி நுணுக்கம் போற்றப் படுகிறது. { . இப்புலவி நீட்டிக்கலாகா தல்லவா! எனவே அடுத்த அதிகாரத்திலேயே அப் பிரிந்த இருவரைச் சேர்த்து வைத்து, அவர்களைத் தனியாக இருக்க விட்டுத் தாம் அங்கிருந்து விடுதலைப் பெற்றுவிடுகின்ருர் வள்ளுவர்" எனினும், அப்படிப் புறப்படுமுன் அவ்வூடலும் கூடலும் அவ்விருவர்தம் உள்ளத்தை என்னென்ன பாடுகள் படுத்துகின்றன என்பதையெல்லாம் நுணுகி ஆராய்ந்து காட்டிய விடுதலை பெறுகின்ருர். தோன்றிய காலத்தில் துன்பம் தரினும், ஊடல் முடிவில் எல்லையில்லாத இன்பம் தருவதாகும். எனவே ஊடல் அந்தக் கூடல் இன்பத்தின் அளவைப் பெருக்கு கின்றது. உலகில் நீரும் கிலனும் கூடியன போன்று அவ்வாறு கலந்த உள்ளத்தவராகிய தலைவன் தலைவியர் ஊடுவதிலும் வேறு தெய்வ உலகவாழ்வே கிடையாது என்கிருர் வள்ளுவர். அவ்வழி கூடலுக்கு ஏற்றம் தருவது உடலேயாகும். . . ஊடலில் தோன்றும் சிறுதுணி நல்அளி வாடினும் பாடு பெறும்' (1322) எனறும, புலத்தலில் புத்தேள்நாடு உண்டோ? நிலத்தொடு' நீர் இயைந் தன்னர் அகத்து' என்றும் அவர் காட்டுகிருர். இவ்வாறு ஊடிப் பெறும் இன்பம் பெரிது என்பதை வள்ளுவர் இன்னும் பலவழிகளில் காட்டுகின்ருர். ஊடு பவள் பெரும்பாலும் தலைவி. அவள் ஊடலை கிக்குபவன் தலைவனே. ஊடலில் யார் தோற்ருலும் தோற்றவர் வெற்றிபெற்றவர்ே என்றும், அவ் வெற்றி பின் நிகழும் கூடலிலே காணமுடியும் என்றும் கூறுகின்ருர் வள்ளுவர். (1323)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/123&oldid=812351" இலிருந்து மீள்விக்கப்பட்டது