பக்கம்:கொய்த மலர்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் காட்டிய காதல் நெறி 123 வாழ்வு வாழ்வார்களென்பதும், உடலால் பிரிய நேரினும் உள்ளம் ஒன்றியே வாழ்வர் என்பதும், இருவரும் மாறிப் புக்கு ஒருவர் இதயத்தே மற்றவர் புகுந்து வாழ்தலே சாகாக் காதல் வாழ்வு என்பதும், அந்த வாழ்வில் மாறு பாட்டுக்கு இடமின்றேனும், இல்லாததை உண்டென்பது போல் ஆக்கித் தாமாகவே சிறிதளவு மாறுபடுதலும் அதன்வழிப் புலத்தலும் பின் நிகழும் கூடலச் சிறப்பிக் கும் தன்மையன என்பதும், அந்தப் புலவியின் எல்லேயிலே காணும் கூடல் வாழ்விலே அவர்கள் என்றென்றும் தம்மை மறந்து வாழ்வார்கள் என்பதும் வள்ளுவர் காட் டிய காதல் பாதையாகும். ஆம்! அவ்வாறு தம்மை மறந்து, இன்பத்தில் திளைத்த காதலர் மற்றவர் வழியில் சென்று அவர்களேத்துன்பத்துக் காளாக்காமல் வையத்தை வாழவிட்டுத் தாமும் வாழ்பவராவர். அவர்வழி வையம் தழைக்கும். இந்த வளமார் மெய்க்காதல் வாழ்வை உலகுக்கு விளக்கிக் காட்டிய வள்ளுவர் புகழ் "வாழ்க’ என வாழ்த்தி நாமும் அமைவோம்! வாழ்க வள்ளுவர்! வளர்க வளஞ்சால் காதல்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/125&oldid=812355" இலிருந்து மீள்விக்கப்பட்டது