பக்கம்:கொய்த மலர்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழி - ஆரியம் - சமஸ்கிருதம் ‘127. வேங்கடத்து அப்பால் வடுகர் நாடு தொடங்கிப் பலமொழி' பேசியவர் வாழ்ந்தனர் என அறிகிருேம், தெலுங்கு. மொழி பேசியவரையே, தமிழர் வடுகர்’ என அழைத்து வந்தனர். "வடுகன் தமிழறியான் வைக்கோலைக் கசுவென் பான்' என்ற ஒரு வேடிக்கைப் பழமொழி காட்டில் வழங்கு கின்றது. அவ்வடுகர் வேங்கடத்துக்கு அடுத்த ஆந்திர நாட்டில் வாழ்ந்தவர்களாவார்கள், தமிழ்நாட்டு வடஎல்லை. யில் வாழ்ந்தவரை வடுகர் என்றும், மொழியை வடமொழி என்றும் தமிழர் அழைத்திருக்க வேண்டும். தொல் காப்பியர் காலத்திலேயும் வடவேங்கடம் வடக்கு எல்லேயாய் இருந்தமையின் அவர் கூறும் வடமொழியும் இவ் வடுகர் பேசிய மொழியைத்தான் குறிக்கும் என்பது. கொள்ளத்தக்கதாகும். தமக்கு அடுத்து அண்மையில்: இருக்கும் மொழிபற்றியும் அது தமிழில் வந்து வழங்கும் வழக்குப் பற்றியும் ஒன்றும் கூருது, எங்கோ ஆயிரம். கல்லுக்கு அப்பாலுள்ள மொழி வழங்குவது பற்றி இலக் கணம் கூறினர் என்ருல் பொருந்தாது. உரையாசிரியர்க ளெல்லாம் அவர் காலத்தில் சமஸ்கிருதம் தமிழில் வழங்கியதறிந்தும் காலச் சூழலுக்கு உட்பட்டும் அவ்வாறு உரை எழுதினர்கள் என்று கொள்ளுவதே பொருத்த மானதாகும். மற்றும் தமிழில் வடுக மொழியாகிய தெலுங்கு மொழிச்சொற்கள் அதிகமாகப் பயின்று வந்தமையாலும், திராவிட மொழிக் குடும்பத்துள்ளே தமிழொடு அது அதிகத் தொடர்பு கொண்டமையானும்: "வடசொல் என்று பிற சொற்களினின்றும் தனியாகப் பிரித்துக் கூற வேண்டிய தாயிற்று. . நிற்க, வடமொழி சமஸ்கிருதத்தைத்தான் குறிப்ப தாயின் அது வழங்கிய நாடு மிக வடக்கே இருந்தது. அந்த ஆர்யவர்த்தத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் ஆயிரம் கல் தூரத்துக்குமேல் உள்ளது. இரண்டுக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/129&oldid=812365" இலிருந்து மீள்விக்கப்பட்டது