பக்கம்:கொய்த மலர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"128 கொய்த மலர்கள் இடையில் தெலுங்கு போன்ற பல மொழிகள் வழக்கில் -உள்ளன. அவை எல்லாம் சமஸ்கிருதத்தை எப்பெயரால் அழைத்தன? வடமொழி என்று ஒவ்வொன்றும் அதைக் கூறியிருக்கிறதா? இல்லை என்பர் மொழி ஆராய்ச்சி -யாளர்கள். எனவே தொல்காப்பியத்தில் வரும் வட மொழி சமஸ்கிருதத்தைக் குறிக்காது என்றும், தமிழ் காட்டு வடஎல்லேயில் வழங்கிய பழந் தெலுங்கையே அது குறிக்கும் என்றும் கொள்வதுவே சிறந்ததாகும். இனி, ஆரியம் என்ற சொல்லைக் காண்போம். சமஸ்கிருதத்திலேயே 'ஆரியம்’ என்பது அம்மொழியைக் குறிக்கவில்லை என்பர் அம்மொழியில் புலமை உடைய அறிஞர்கள். தமிழிலும் ஆரியம் என்ற சொல் காலத் தால் பிந்தியே வழங்குகின்றது. வடநாட்டிலிருந்து வந்தவரை ஆரியர் என்றும் அவர் மொழியை ஆரியமொழி என்றும் பிற்காலத்தில் கொணடனர். எனினும் தமிழில் "ஆரியம் என்ற சொல்லுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உள்ளன. ஆரியன் என்ற சொல்லுக்குப் பெரியோன், ஐயன், அறிவுடையோன், ஆரிய வர்த்த வாசி, உபாத்தியாயன் எனப் பற்பல பொருள்கள் உள்ளன. ஆரியப்பாவை எனற தமிழ்க்கூத்து காட்டில் பன்டைநாளில் வழக்கத்தில் இருந்தது. ஆரியம் என்ருல் கேழ்வரகு என்ற ஒரு பொருளும் உண்டு. ஆரிய வாசியம் என்பது ஓமத்துக்குப் பெயர். இப்படி மனிதரில் உயர்ந்த வரையும், உணவுப்பொருளில் உயர்ந்ததையும், மருந்துப் பொருளில் உயர்ந்ததையும் 'ஆரிய' என்ற சொல்லாலே வழங்கினர் எனக் காணலாம். ஆரியன் என்ருல் மிலேச்சன் என்ற பொருளும் உண்டு. என்ருலும் பெரும் பாலான பொருள்களை நோக்கினல் ஆரிய' என்ற சொல் உயர்வைக் குறிக்க வரும் சொல்லாகவே இருப்பதை அறி கின்ருேம். தமிழ் இலக்கியத்தில் வடக்கே உள்ள அரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/130&oldid=812369" இலிருந்து மீள்விக்கப்பட்டது