பக்கம்:கொய்த மலர்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடமொழி - ஆரியம் . சமஸ்கிருதம் 129* ரைக் குறிக்க வட வாரியர் என்ற சொல்லே எடுத். தாளல் காணப்படுகின்றது. எனவே வட வாரியர்' என்ற சொல் வேண்டுமாயின் ஆரியவர்த்தத்தில் சமஸ்கிருதம் பேசிய மக்களைக் குறிக்கும் எனக் கொள்ளலாம். மற்றும். தமிழ் நாட்டில் வடமொழி பேசி, வேதத்தை வாழ வைக்க வும், அதை கிந்திப்பவரை தாக்கிப் பேசவுமே பிறந்த, வராகத் தம்மைக் கூறிக் கொள்ளும் திருஞான சம்பந்தரை வட நாட்டவர் ஆரியர் என்றே கொள்வ தில்லை. சங்கராச்சாரியார் அவரைத் திராவிட சிசு’ என்றே குறித்தததாகக் கூறுவர். எனவே வேதத்தைக் கொண்டுள்ள சமஸ்கிருதத்தை 'ஆரிய மொழி யென: அவர்களே கொள்ளவில்லை எனத் தெரிகின்றது. திருநாவுக்கரசர் 'ஆரியமும் தீந்தமிழும் ஆயினன்' என்று. கூறுவதும் சமஸ்கிருதத்தை அன்று எனலாம். ஆரிய: மொழி என்ருல் கிரந்த மொழி என்ற பொருளும் உண்டு. சமஸ்கிருத நூல்களிலே எங்கும் அம்மொழியைக் குறிக்கும். பெயர் ஆரியம் என்று காட்டப் பெறவில்லை என்பது அம். மொழியுணர்ந்த புலவர் துணிவு. எனவே தமிழில் வழங்கும் 'ஆரியம்' என்ற சொல் சமஸ்கிருதமல்லாத வேறு. ஒன்றைக் குறிப்பதாகவே கொள்ள வேண்டும். ஆரியம் என்ற சொல்லுக்கு அழகு என்ற பொருளும் உண்டு. எனவே அழகிய ஒன்றை ஆரியம் எனக் கொள்ளல் பொருந்தும். அரியவற்றையும் ஆரியமாகக் கண்டனர். மக்களுள் கிடைத்தற்கரியராய் ஒழுக்க சில ராய் விரதம் முதலியன மேற்கொண்டவராக உள்ளவராய்வாழ்ந்த அறிவர் ஆரியராயினர். இவர் சமஸ்கிருதம் பயின்றவரின் வேறு என்றும், அவருள் அறிவர், தாபதர்போன்ற பிரிவுகள் உள வென்றும், இலக்கணத்தால் அறிகி" ருேம். எனவே அரிய என்ற சொல்லில் இருந்து ஆரியம். என்ற சொல் பிறந்து, பண்பால் உயர்ந்த, குணாலத்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/131&oldid=812370" இலிருந்து மீள்விக்கப்பட்டது