பக்கம்:கொய்த மலர்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைத்தறி ஆடைகள் 11 மேலை நாட்டு மக்களால் விரும்பப்பட்டு வாங்கப்பெற்ற தெனவும், பிறகு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அந்தத் தொழில் பழிதீர்த்த பான்மையால் நலிவுற்றதெனவும் கேள்விப்படுகிருேம். எனவே, மிகப் பழங்காலங்தொட்டு கேற்றுவரை மெல்லிய இழைகள் இழைத்துச் சிறந்த ஆடைகளே கம் காட்டு மக்கள் நெய்தார்கள் என்பதை யாரே மறுக்கவல்லார்! - பல்வேறு குழல்களுக்கு இடையே கைத்தறித் தொழிலும் நாட்டில் ஓரளவு வாழ்ந்து வளர்ந்து வருகிறது. பல இலட்சக் கணக்கான மக்கள் இந்தத் தொழிலையே கம்பி வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கமும் பல நெருக்கடி யும் குழலும் ஈர்க்க அவற்றின் இடையிலும் கைத்தறி வளர ஓரளவு உதவி செய்கின்றது. என்ருலும் இன்று செய்வதிலும் இன்னும் அதிகமாகச் யெய்யலாம். அரசாங்கத்துக்கு மனம் இருக்கிறது; என்ருலும் சிலருடைய தயவையும் அது இன்னும் நாடவேண்டிய நிலையில் இருக்கின்ற காரணத்தால் அளவுக்கு மேல் கைத்தறிக்கு அதல்ை உதவி செய்ய இயலவில்லை என்பது கண்கூடு. இந்தியாவில் உழவுக்கு அடுத்தபடியாக-ஏன்?உழவரோடு இயைந்ததாக அன்று தொட்டு வளர்ந்து வந்த ஒரே தொழில் இந்த நெசவுத் தொழிலேயாகும். மனிதனுக்கு உணவு இல்லாவிட்டாலும் கவலேப்பட் வேண்டியதில்லை. அந்தப் பட்டினி கிலேயைப் பல நாள் வெளிக்காட்டிக்கொள்ளாது மூடிவைத்துவிடலாம். ஆனல் உடையின்றி வெளியே செல்ல முடியுமா? மானமாக வாழ முடியுமா? அதனுல்தானே 'ஆடையில்லா மனிதன் அரை மனிதன்' என்று தமிழர் சொல்லி வைத்தனர். எனவேதான், மக்களுக்குத் தேவையான உணவினே விளேக்கும் உழவுக்கும் மே லா. க இவ்வுடையினைச் செய்யும் தொழிலைப் போற்றி வந்தார்கள். அந்தக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/13&oldid=812367" இலிருந்து மீள்விக்கப்பட்டது