பக்கம்:கொய்த மலர்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. உள்ளும் புறமும்* என் வீட்டில் எப்பொழுதும் குருவிகள் பறந்து கொண்டே இருக்கும். ஒரு சில சமயங்களில் சில குருவி கள் என் மேசையின் மேல் உட்காருவதும் உண்டு. சுவர் களில் மாட்டியிருக்கும் தொங்கு படங்களின் பின் அவை தம் மாளிகைகளாகிய கூடுகள் உள்ளன. அவைகள் குடும்பம் நடத்தும் வழியே தனி. பண்பாடு, பண்பாடு” என்று கூப்பாடு போடும் மனிதன் அதைப் பற்றிக் கொண்டு இல்லை என்ருலும் அவன் வாழும் வீட்டுக்குள் கூட்டை அமைத்துக் கொண்ட இந்தக் குருவிகள் அப் பண்பாட்டை விடாது பிடித்துக் கொண்டிருக்கின்றன: ஆணும் பெண்ணும் இணைபிரியாது கலந்து வாழ்கின்றன. முட்டையிட்டுக் குஞ்சு பொறித்து அக்குஞ்சு வளரும் வரையில் காக்கும் பண்பு அக்குருவிகளிடம் நன்கு அமை: கின்றது. அவை தம்மைப் பார்த்தாவது இந்த மனிதன் பண்பாட்டைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண் ணத்தில்தானே ஏனே அவன் கண்முன்னே அவன் வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றன. அந்த இணைபிரியா ஆணும் பெண்ணும் வாழும் வாழ்வு மக்களுக்கு எடுத்துக் காட்டு. அவைகளுக்கு உள்ளம் இல்லை என்று யார்" சொல்ல முடியும்? அவற்றின் கெஞ்சின் துய்மை: கிலையை யாரே அறுதியிட வல்லார்? இவ்வாறு ஒருவரோடு ஒருவர் கலந்து பழகும் மனித இனம் அந்தப் பண்பாட்டைக் கற்றுக்கொள்ள வேண்டும். என்றே அவை தம்முன் உள்ளங் கலந்து வாழ்கின்றன. ஆம். அதுதான் பண்பாடு. அக் குருவிகளுக்கு உள்ளும்

  • முல்லை (ஏப்ரல் 60) இதழில் வந்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/134&oldid=812375" இலிருந்து மீள்விக்கப்பட்டது