பக்கம்:கொய்த மலர்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளும் புறமும் 133 புறமும் ஒன்ருகவே உள்ளன. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் நாகரிகம் அக்குருவிகளுக்கு என்றும் தெரியவே வழியில்லை. எல்லாவற்றிலும் உயர்ந்தவன் என்று தன்னைக் கூறிக்கொள்ளும் இந்த மனிதனே "பண்பாடு என்று பேசியும் எழுதியும் காட்டிவிட்டு, தன் தனி வாழ்வில் அதைக் குழிதோண்டிப் புதைத்துவிடு கிருன். பண்பாடு உதட்டால் வருவதன்று; உள்ளத்தில் முகிழ்ப்பது. உள்ளும் புறமும் ஒத்து வாழ்வதே பண்பாடு ஆகும். மனிதனுக்கு உள் புறம் என்ற இரண்டும் தனித்தனித் தொழிற்படுகின்றன. உள்ள நிகழ்ச்சியைப் பிறர் அறிந்து கொள்ள முடியாது. ஆனல் புறகிகழ்ச்சி அனைவரும் அறிந்துகொள்ளத் தக்கது. பிறர் அறிந்துகொள்ள முடி யாது என்பதற்காக இன்றைய மனிதன் அகத்தைப் புறத் தினும் வேருக நன்கு மாற்றப் பழகிக் கொண்டான். மனிதனுக்கு உள்ளத்து உண்டான உணர்வே பின் சொல்லாகவும், செயலாகவும் புறத்தே தொழிற்படும். எனவே எல்லாப் புற நிகழ்ச்சிகளுக்கும் உள்ளமே அடிப்படை என்ருலும், இன்றைய உலகில் பலர் உள்ளத்தை மறைத்தே உதட்டை அசைத்தும் உடலை அசைத்தும் புறத்தொழில் புரிகின்றனர். இது மனிதப் பண்பாட்டிற்கே மாறுபட்டது. தமிழில் இந்த மூன்றும் ஒத்து இயங்கவேண்டும் எனக் குறிக்கவே மூன்றிடத்தும் மெய் வேண்டும் என அறிஞர் அறுதியிட்டனர். "உள்மெய், வாய்மெய், மெய் மெய் என்ற மூன்றே உண்மை, வாய்மை, மெய்ம்மையா யின என்பது தேற்றம். எனவே, உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் கயமை மனித உணர்வுக்கு அப்பாற் பட்டதாகும். இதைத்தான் சேர்ந்து வாழும் அந்தக் குருவி இனம் மனிதன் பக்கத்தில் இருந்துகொண்டே உணர்த்துகின்றது. கொ. ம. 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/135&oldid=812377" இலிருந்து மீள்விக்கப்பட்டது