பக்கம்:கொய்த மலர்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கொய்த மலர்கள் மனிதன் குருவி போன்ற பிற பறவை விலங்குகளி லும் மேம்பட்டவன். அவை ஒன்ருேடு ஒன்று பழகினல் தான் பற்றிக்கொண்டு வாழ முற்படுகின்றன. மனிதனே நேர்முகப் பழக்கம் இன்றேனும், உள்ளத்தால் கலந்து வாழக் கற்றவன். இதைத்தான் திருவள்ளுவர், புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்' என எடுத்துக் காட்டினர். r மனிதனுக்குப் பிற உயிர்களுக்கு இல்லாத உள் ளுணர்வு ஒன்று உண்டல்லவா? அதல்ை அவன் பிறரிடம் நன்கு பழக முடியும். மற்றவரோடு நன்கு பழகுவதை 'உளங் கலந்து பழகுதல் அல்லது 'மனம் விட்டுப் பழகுதல் என்பர். இதன் கருத்தென்ன? நட்பு வெறும் புறத் தோற்றத்திற்காக அல்லாது உள்ளத்து நிறைவுக் காகவே அமைய வேண்டும் என்பதாம். ஆல்ை இன்று மனித இனத்தில் எத்தனை பேர் இந்த உணர்ச்சி நட்பிலே வாழ்கின்றனர்? இதலைன்ருே வள்ளுவர் போன்ற அறிஞர்கள், தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும்' கணகொடிது யாழ்கோடு செவ்விது.ஆங்கு அன்ன வினைபடு பாலாற் கொளல் என்பன போன்ற நீதிகளைச் சொல்லவேண்டிய தேவை உண்டாயிற்று. மனிதன் இந்த நிலையில் வாழ்வோனே யானல், உலகம் என்று முன்னேற்றப்பாதையில் செல்லும் என எண்ணி வாடுவர் நல்லவர். இவ்வுணர்ச்சியே-உள்ளத்தால் ஒருவரை ஒருவர் உற்று அறியும் செயலே-மக்கள் வாழ்வுக்கு இன்றி யமையாத ஒன்று என்பதைத் தமிழர் நெடுங்காலத்துக்கு முன்னமே கண்டு வாழ்ந்தார்கள். தமிழர் தம் சமுதாய வாழ்வு பண்பட்ட வாழ்வாகவே இருந்தது. அங்கொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/136&oldid=812379" இலிருந்து மீள்விக்கப்பட்டது