பக்கம்:கொய்த மலர்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 கொய்த மலர்கள் யாகத்தான் கினைக்கத் தோன்றும். இதில் காதற்கிழமை ஒளி விடுகிறது. ஆனல் இக் காதற்கிழமை தலைவன். தலைவியைப் பற்றியதன்று. ஆதன் ஊங்கன் என்ற சிற்றரசனுக்கும் ஆத்திரையனருக்கும் இடைப்பட்ட கிழமையாகும் இது. அவர்கள் இருவரும் உள்ளும் புறமும் ஒத்தனர். எனவே புலவர் தம் நெஞ்சைத் திறந்தால் அவனைக் காணமுடியும் என்கிருர். அவர் அத்துடன் கிற்கவில்லை; அதற்கு மேலும் செல்லுகிருர். தான் அவனே மறக்கமுடியுமா? என்ற வினவினே எழுப்பிக்கொள்ளு கிருர். அதற்கு அவரே பண்பாட்டின் உச்சியில் கின்று பதிலும் தருகிருர். மறக்கமுடியும் என்கிருர். எப்போது? ஆம் ஒரே ஒரு வேளையில்தான். தன்னை மறக்க முடியு. மன்ருே! அவ்வாறு தன்னை மறந்து இறக்கும் அதே வேளையில் தன்னினும் வேருக அல்லாத அவனையும் மறக்கத்தானே வேண்டும். ஆகவே தன் உயிர் பிரியும், தன்னை மறக்கும் அந்த இறுதிக்காலத்திலன்றி, உயிர் வாழும் காள்வரை ஆதன் ஊங்கனே அவர் எந்தக் கணமும் மறக்கவில்லை. எனவேதான் என் நெஞ்சம் திறப்போர் கிற்காண்குவர் என்று, அவன் தன் அகத்தில் நிறைந்திருப் பதை அவர் காட்டுகின்ருர். எனவே அந்தப் புலவர் உள்ளும் புறமும் ஒத்த வாழ்க்கை வாழ்ந்தவர். அதல்ை தான் போலும் அவர் இந்த ஆரவார உலகில் எங்கோ ஒரு மூலையில் அமைதியாக இருக்கின்ருர்; எனினும் பண்பாட்டில் தலைகின்ற தமிழகம் அத்தகைய பண்பட்டஉள்ளும் புறமும் ஒத்த - நல்லவரை மறந்துவிடாது என்பதை காட்டுக்கு உணர்த்தவேண்டும். இதோ அவர் அடிகளைத் தருகிறேன். 'எந்தை வாழி! ஆதனுங்க! என் நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/140&oldid=812389" இலிருந்து மீள்விக்கப்பட்டது