பக்கம்:கொய்த மலர்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 கொய்த மலர்கள் சில ஆணையாளர்களும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் புகுந்து தமது கட்சிக் கருத்தினைப் பேசுவது தவருகு மன்ருே மற்றும் பள்ளிப் பாட நூல்களிலே தம் கட்சித் தலைவர்கள் பற்றியும், கொள்கை பற்றியும் செயல் பற்றி யும் பாடம் இருக்க வைப்பது தவறுதானே' என்று எதிர்க் கட்சிக்காரர்கள் சொல்லுகிருர்கள். எனவே அதற்கு ஆளும் கட்சியார் பதில் சொல்ல மயங்குகிருர்கள். நான் அக்கட்சிகளைப் பற்றியெல்லாம் கினைக்கும் போது என்னல் ஒரு முடிவுக்குத்தான் வரமுடிகிறது. எந்தக்கட்சி யானுலும், எவரும் கல்வி கிலேயங்களுக்குச் சென்று மாணவருக்குத் தம்மைப் பற்றியும், தம் செயல் பற்றியும் கூறிப் புகழ்ந்து பிறகட்சியாளரை இகழ்தலாகாது. மற்றும் அண்ணல் காந்தி அடிகள் போன்று காட்டுடை மையான கல்லவர்தம் படங்களையும் பாடங்களையும் தவிர்த்துச் சாதாரணமாகக் கட்சியைச் சேர்ந்து வாழும் தலைவர்தம் படங்களையும் பாடங்களையும் நூலில் சேர்க்கக் கூடாது. அரசாங்கப் பொதுப்பணத்தால் செய்த எந்தச் சாதனையையும் தம் கட்சியினர் சாதனையாகக் காட்டி, நூல்களில் பாடம் தீட்டலாகாது. முடிவாகச் சொல்ல. வேண்டுமானல் கல்வித்தாபனங்கள் அரசாங்கப் பிடிப்பி லிருந்து விலகியனவாகிக் கட்சிச்சார்பற்ற பொதுமக்க ளால் நடத்தப்பெற வேண்டும். அரசாங்கக் கல்லூரி களிலும் பள்ளிகளிலும் பிறவிடங்களிலும் யாரும் தம். கொள்கையைப் பரப்ப விடாதிருக்க ஆளும்கட்சி தானே முன்னின்று வழிகாட்ட வேண்டும். இந்தக் கருத்தைப் பிற தமிழ் நாட்டுக் கட்சியாளர் அனைவரும் ஏற்பார்கள் என்பதில் ஐயமில்லை. அப்படி ஏற்று அவர்களும் தங்கள் தொடர்பினையும் மாணவர்களோடு கொள்ளவில்லை எனறு முடிவு செய்து விடுவார்களாயின் ஓரளவு மாணவர் நிலைகெட்டு அரசியல் அலைகளால் தள்ளப்படும் கொடுமை. குறைவுபடும். பள்ளி அல்லது கல்லூரிகளில் கலைக்கழகங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/144&oldid=812397" இலிருந்து மீள்விக்கப்பட்டது