பக்கம்:கொய்த மலர்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர் நல்லவரே 143:. களில் அறிஞர்தம் அறவுரைகளே முழக்க முறும். மாணவ: ரும் கல்லவகையில் முன்னுக்குவர வாய்ப்பும் வசதியும் உண்டு. ஆயினும் இந்த ஒரு செயலிேைலயே மாணவர் களுக்கு நிறை ஒழுக்க நெறியைக் கற்றுக் கொடுத்துவிட முடியாது. மாணவர்களைப் பயிலும் காலத்திலேயே நாடாளத். தகுதியுடையவர்களாக்க வேண்டும் எனச் சிலர் கருது: கின்றனர். அதனலே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தேர்தல் முறை இன்றியமையாது வேண்டப்படுகிறது. அத் தேர்தல்முறை மாணவர்களுக்குள் பிளவும் மாறு பாடும் உண்டாகக் காரணமாக அமைகின்றது என்றஉண்மையைக் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பணி யாற்றுகின்றவர் நன்கு அறிவர். அமைதியும் கூட்டுறவும் பண்பும் அன்பும் கலந்து முகிழ்க்க வேண்டிய கல்லூரி வாழ்க்கையில், வேறுபாடும் பொருமை உணர்வும்:அவற்றின் வழி அலேவும் அலக்கணும் உண்டாவதைக் காண்கின்ருேம். இதனலே கல்லூரிகளிலோ உயர்நிலைப் பள்ளிகளிலோ கலைக்கழங்கள் தேவை இல்லை என்பது என் கருத்தன்று. ஆயினும் அவற்றை மாணவர் வழி இயங்கவிடுவதிலும், அவர்களே அதிகமாகப் பயிலவிட்டு விட்டு, ஒவ்வொரு துறையிலும் வல்லவரை அழைத்து: வந்து, அவர்களே மாணவர் மாட்டுப் பேசவும், கருத்துத் தெளிவு காட்டவும் செய்து கலக்கவைக்க வேண்டிய பொறுப்பை அவ்வத்துறையில் வல்ல ஆசிரியர்களே மேற்கொள்ள வேண்டும். அதற்கும் ஒரு கல்லூரிக்குப் பல கழகங்கள் என்ற நிலைமாறி, ஒன்றற்கு ஒரு கழகம் போதும் என நிறைவு பெற்று, அதன் வழியே பெற வேண் டியதாகிய அனைத்து நலன்களையும் பெறமுடியும் என்ப தைக் காட்டவேண்டும். இவ்வாறன்றித் தத்தமக்குப் பேரும் புகழும் வரவேண்டுமென்ற காரணத்தாலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/145&oldid=812399" இலிருந்து மீள்விக்கப்பட்டது