பக்கம்:கொய்த மலர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-144 கொய்த மலர்கள் போட்டியிடுவதும், அதன் வழிப் பொருமை உள்ளம் கொண்டு ஒருவருக்கொருவர் மாறுபட்டு நிற்பதும் மாணவர் உலகில் இன்று நமக்கு வேண்டாதன. எனவே கல்லூரி அமைப்பாளர்களும், அரசியலாரும் இத்துறை .யில் கருத்திருத்த வேண்டும். மாணவர் படிக்கும் நேரமும் அறிந்து கொள்ளும் பொருளும் மிகக் குறைவு, சுற்றுலா என்று பல ஊர்கள் சுற்றுவதும், கூட்டங்கள் கூட்டிப் பொழுது போக்கு வதும், நாடகம் முதலியன கற்றுக்கொள்ள ஊக்கமளிப் பதும் இன்றைய கல்வித் துறையில் இடம் பெற்றுள்ளன. இவற்றை யாரும் தேவையற்றன என்று சொல்ல மாட் .டார்கள். இவையெல்லாம் இல்லாத காலத்திலே படித்த கம் முன்னேர்கள் . நமது பரம்பரையினர் - அறிவற்றவர் களாகவா இருந்தார்கள்? அவருள் எத்தனை அறிஞர்கள் இன்றும் நாட்டின் மாணிக்கங்களாக விளங்குகிருர்கள்! ஆகவே, அத்தகைய பல முகக் கருத்திருத்தும் கல்வி கிலே மாறவேண்டும். பாடத்திட்டங்கள் அடிக்கடி மாற்றப்பெருகின்றன. தாம் ஆளவந்த காரணத்தால் எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்ற கருத்தில் ஒவ்வொரு ஆளும் கட்சியும் செயலாற்றத் தொடங்கில்ை நாட்டு நிலை என்னவது? ஆரம்பப் பாடசாலையிலும் உயர்நிலைப் பள்ளியிலும் விடுதலை பெற்ற பிறகு என்னென்னவோ மாறுதல்களைக் காண்கின் ருேம். கல்லூரிகளிலே 3+2= 4 என்பது போய், 1+8= 4 என்ற மாறுதல் புகுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் வேறு சில மாறுதல்கள் வரப் போவதாகவும் அறிகிருேம். இவையெல்லாம் அமைதி :யான கல்வியாற்றில் அலைமோதவிடும் கற்களாக அன்ருே அமைகின்றன. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/146&oldid=812401" இலிருந்து மீள்விக்கப்பட்டது