பக்கம்:கொய்த மலர்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*146 . - கொய்த மலர்கள் சொல்லுகிறேன். மாணவர்களை மட்டும் குறைக் கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை. அவர்தம் உள்ளங்கள் கண்ணுடி போன்றவை. அவர்தம் எதிரில் காணும் காட்டு கிலே-சமூக நிலை-கட்சி நிலை-கல்வி நிலை-ஆசிரியர் நிலை-அவர்தம் தலைவர்தம் நிலை அத்தனையும் அவர்களி .டத்திலும் நிலவுகின்றன. இப்படியே ஒவ்வொன்றையும் எண்ணிப்பார்த்து நோயின் மூலத்தை அறிந்து மருந்து கொடுக்கவேண்டுமே ஒழிய வீணில் மற்றவரைக் குறை கூறல் தவருகும். மாணவராகிய கண்ணுடியின் முன் நல்ல உருவங்கள்-அவற்றின் செயல்கள்-அதன் வழி உரு வாகும் உணர்வுகள்-அவ்வுணர்வில் தோன்றும் ஒழுக்க நெறிகள் நிறத்தப்ப்ெற வேண்டும். அரசாங்கமும் பிறரும் அதைச் செய்து பார்க்கட்டும். பிறகு அவர்களே கூறுவார்கள். மாணவர்கள் நல்லவர்களே என்று; ஆம்: மாணவர்கள் நல்லவர்கள் தாம். அந்த நல்லவர்களை கல்லவர்களாகவே வளர்த்து, நல்லவர்களாகவே வாழச் செய்து, வருங்காலச் சந்ததியை உருவாக்கும் பொறுப்பு எல்லோருக்கும் உரியது. வாருங்கள்-சேரவாருங்கள்திரண்டுவாருங்கள்-செம்மைப் பணிபுரிய வாருங்கள்செயலாற்றுங்கள். மாணவச் செல்வங்கள் நல்ல வருங்காலச் செல்வங்களே என்பதைச் செயல்வழி ஒன்றிக்காட்டி உயர்த்துங்கள்; நீங்களும் உயருங்கள் என்ற வேண்டுகோளுடன் இக்கட்டுரையை முடிக் .கின்றேன்! மாணவர் கல்லவர்! வாழ்க அவர் கல் உள்ளம் வளர்க அவர் அறிவுத் திறன்! சிறக்க அவர் எதிர்காலம்! செழிக்க அவர் செயல் முறைகள்! f

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/148&oldid=812405" இலிருந்து மீள்விக்கப்பட்டது