பக்கம்:கொய்த மலர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I(). கவிஞன் யார்?* உலகில் சாகா வரம் பெற்று வாழ்பவன் கவிஞனே -யாவன். காலம் இடையிட்டும் அவன் நிலையுற்ற வாழ்க்கையைப் பெற்றுவிட்டர்ன். ஊழிதோறுாழி எத் தனை எத்தனையோ பொருள்கள் தாம் இருந்த இடத்தின் சாயல்கூடத் தெரியாதவழி அழிந்து போயின என்ருலும் கவிஞன் தன் கவிதை மூலம் அவ் வூழிகளையெல்லாம் வென்று நிலைத்து வாழ்வதை நாம் காண்கின்ருேம். பாரனேத்தும் போற்றச் சிறந்திருந்த புகார் நகரம் இன்று இல்லை? அதன் சுவட்டைக் காணவும் வழியில்லை. ஆனல் அதைப் பாராட்டிய பட்டினப்பாலை இன்று வாழ்கின்றது. என்றும் வாழும். ஆம்! அப் பட்டினப் பாலேயின் வழி அதை இயற்றிய புலவன்.கவிஞன் உருத்திரங்கண்ணன்கிலத்து வாழ்ந்து வருகின்ருன் அல்லனே! அவ்வாறு என்றென்றும் நிலைபெற்று வாழும் கவிஞன் யார்? அவன் கிலே என்ன? எப்படி? அவனே அவ்வாறு வாழ வைப் பது எது? இவைபற்றி எல்லாம் எண்ணிப் பார்ப்பின் உண்மைக் கவிஞனுடைய உயர் நலம் நன்கு புலகுை மன்ருே! கவிஞன் பிறப்பவன? அன்றி ஆக்கப்படுவபன? பலரும் அவன் பிறப்பவனே என்று சொல்லுகின்றனர். அதன் கருத்தென்ன? பிறக்கும்போதே கவி பாடிக் கொண்டே பிறக்கிருன் என்று சொல்வதா? அது எவ் வாறு பொருந்தும்? ஆயினும் கவிஞன் இலக்கணங் களேப் பயின்று, எதுகையும் மோனேயும் இணைக்கும் வகை கற்று, சீரும் அசையும் தெரிந்து, அதன்படி பாடு

  • தென்றல் கவிஞர் மலரிலிருந்து (6-8-60)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/149&oldid=812407" இலிருந்து மீள்விக்கப்பட்டது