பக்கம்:கொய்த மலர்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 கொய்த மலர்கள் பவன என எண்ணின் அந்த எண்ணமும் தவறேயாகும். யாப்பிலக்கணம் பயின்று அதன்படி பாட்டிசைக்கத் தொடங்குவாயிைன் எவனும் பிறர் உள்ளம் தொடும் தெள்ளு மொழிக் கவிதையைப் பாடமுடியாது. பாடின தாக அவன் கினேப்பினும் விரைவில் அது மறைக்தொழி யும். எனவேதான் காரிகை கற்றுக் கவி பாடுவதனினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே என்ற பழமொழி நாட்டில் உலவுகின்றது. அப்படியாயின், இலக்கண முறையற்ற கவிதை பாடுவதா என்ற ஐயம் எழும். அதுவும் தவறே. உண்மைக் கவிஞன் தன்னை மறந்த நிலையில் யாதொரு வேறுபாடுமற்ற தன் உள்ளத்தே உயர்வுன்னி மெள்ள மெள்ளப் பாட்டிசைத்து உலகுக்குக் கவிதை இன்பத்தைத் தருவான். அக்கவிதை எல்லா இலக்கணங்களும் பொருந்தியதாக இருப்பதோடு, அதுவே இறவாத கவிதையாக இருக்க முடியும். எனவே, கவிதை என்றும் எழுத்தெண்ணுவதாலோ சொல் கட்டுவ தாலோ அமைவதன்று. அது உள்ளத்தின் அலை-எழுச்சி யின் உயர்ச்சி. அதில் கவிஞன் தன்னை மறக்கிருன். அதைப் பாடுபவனேயும் மறக்க வைப்பான். அந்த மெய்க்கவிஞன் வாழ்வாகை என வாழ்த்துகிறேன். கல்லேக் கண்டால் நாயைக் காணுேம் நாயைக் கண்டால் கல்லேக் காணுேம் என்பது நாட்டில் வழங்கும் சாதாரணப் பழமொழி. அதன் கருத்தென்ன? நாயை அடிப்பதற்கு அதைக் காணும்போது கல் இல்லையே என்று ஏங்குவதா? அன்று! அன்று!! இப் பழமொழி கலை ஞனின் பெருமையைக் காட்டும் ஒன்ருகும். கல்லில் நாய் உருவம் செதுக்கிய ஒரு கலைஞனின் கை வண்ணத் திறனைப் பாராட்டும் மொழி இது. கல்லிலே நாய்; அதன் கலம் அறிந்து கலைப் பண்பு உணரும் நல்லவனுக்கு அது காயாகவே தோன்றுகின்றது. அல்லாதவருக்கு அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/150&oldid=812410" இலிருந்து மீள்விக்கப்பட்டது