பக்கம்:கொய்த மலர்கள்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. - நாடகத் தமிழ்” பழங்காலத்தில் தமிழையே மூவகையாகப் பிரித்தார் கள். இயல் தமிழ் என்றும், இசைத் தமிழ் என்றும், நாடகத் தமிழ் என்றும் அவை வழங்கப்பெற்றன. இலக் கியங்கள் செய்யுள் நடையிலும் உரை நடையிலும் எழுதப்படின் அவை இயற்றமிழ் ஆகும். இயற்றமி ழோடு இசையினையும் சேர்த்துப் பயிலும் முறையும் அமையும் நூல்களும் இசைத்தமிழின் பாற்படும். இயலும் இசையும் சேர்ந்து கற்காத பாமரனும் கூட அறிந்து கொள்ளும்படி எளிய நடையில் எழுதப்பெற்றுப் பலரும் காண நடித்துக் காண்பிக்கத் தக்க வகையில் அமைவது நாடகத் தமிழ் ஆகும். இவை மூன்றும் மிகப் பழங்காலங் தொட்டே தமிழ் நாட்டில் வழக்கத்தில் இருத்துவந்துள் ளன. இவற்றை ஒன்று சேர்த்தே முத்தமிழ் என வழங்கி வந்தனர். எனவே, என்று தமிழ் உண்டோ அன்றே நாடகமும் உண்டு என்று கொள்ளுதல் பொருந்தும். என்ருலும், பழங்காலத்தில் தமிழில் இருந்த நாடக நூல்கள் எவை என்று நம்மால் கூறமுடியாது. நாடகங்கள் இருந்தும் அவை கடலால் கொள்ளப்பட்டனவோ என கினைக்கவேண்டி இருக்கிறது. இன்றைக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கொள்ளும் தொல்காப்பி பத்திலேயே நாடகம் பற்றிய குறிப்பு வருகின்றது; நாடக வழக்கு உலகியல் வழக்கு எனப் பிரிக்கின்ருர். இந்தப் பிரிவில் இருந்து நாம் ஒன்றை கன்ருக அறிந்து கொள்ள முடிகின்றது. அதுதான் நாடக வழக்கு சாதாரண உலக வழக்கிலும் சற்று வேறுபட்டது என்பது. உலக வழக்கு வாழ்வோடு பொருந்தி அமைதி யாகச் செல்வது; நாடக வழக்கோ உலக நடைக்கு மாறு படாததாய், அதே வேளையில் எழுதும் புலவனுடைய

  • கல்கத்தா இதழ்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/156&oldid=812422" இலிருந்து மீள்விக்கப்பட்டது