பக்கம்:கொய்த மலர்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞன் யார்? 153 ான்கு தெளிவாகும். ஆங்கிலத்திலேயும் சிறந்த புலவர் கள் இவ்வாறு மக்கள் வாழ்வோடு பிணைந்த கவிதை பாடிச் சென்றவர்களாகத்தான் உள்ளார்கள். எனவே கவிஞன் தன்னைச் சுற்றியுள்ள உலகத்தையும். அதில் வாழும் உயிர்களையும் கண்டு, அன்புளங்கொண்டு, அவற் றின் வாழ்வையும் வளத்தையும் அன்றித் தாழ்வையும் தளர்ச்சியையும் எண்ணி, அவற்ருேடு தன் உயர்வுள்ளத் துக்கு ஏற்பப் பயில்வார் மன நிலைக்கு ஒப்ப நல்ல கற்பன் கயத்தையும் கலந்து, உவந்து, வந்து, உணர்ந்துணர்ந்து பாட்டிசைப்பவனேயாகும். அவன் கவிதையில் ஒவ்வொரு எழுத்தும் களிகடம்புரியும்; வாழும், வாழவைக்கும்; அத்தகைய கவிஞர் அன்று தொட்டு எத்தனையோ பேர் தோன்றி வாழ்ந்து நாட்டை வளம்பெறச் செய்துள்ளனர். அத்தகைய கவிஞர் வரிசையில் நாம் வாழும் இந்த நூற்ருண்டிலும் தமிழ் காட்டில் சிலர் தோன்றியுள்ளனர். அவர்வழி நாடு நலம்பெறுக என நாமும் வாழ்த்துவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/155&oldid=812420" இலிருந்து மீள்விக்கப்பட்டது