பக்கம்:கொய்த மலர்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152. - கொய்த மலர்கள் வேளையில் அந்தப் பொருள் எல்லாருக்கும் எளிதில் விளங்கக் கூடியதாக வாழ்க்கையில் தொடர்புடையதாக வும் அமைந்துவிடுகிறதன்ருே! எனவே கவிஞன் சொல் அலுக்கும் பொருளுக்கும் முட்டுப்பாடு இல்லாதவகை 'உளங்கனிந்த போதெல்லாம் உவந்து, வந்து பாடுபவகை' இருக்க வேண்டும். அவன் உலகில் பொருட் செல்வம் அற்றவகை இருக்கலாம். ஆனல் அவனது கவிதைச் செல்வம் அவனே வையம் உள்ளளவும் வாழ வைக்கும் என்பது உறுதி. சங்ககாலப் புலவருள் பலர் இவ்வுண் மையை உணர்ந்திருந்த காரணத்தினலேதான் தமக் கெனப் பொருள் விழையாராய்ப் பழுமரம் நாடிச் செல்லும் பறவைகளாய் வாழ்ந்து வந்தார்கள். அதன. லன்ருே அவர்கள் இன்றும் வாழ்கின்றனர். இன்று உலகில் கவிதை நலத்தையும் கவிஞன் உயர்வையும் காட்டப் பலப் பல மொழிகளில் பலப்பல நூல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் அத்தகைய நூல்கள் பல வரவில்லை என்ருலும், தமிழ் நாட்டு மக்கள் காலந்தோறும் தோன்றி வாழ்ந்த புலவர் களில் தக்காரைப் போற்றி மதிக்கத் தவறவில்லை. பொது மக்களாலே - கற்ருர் மட்டுமன்றி மற்ருராலேயும் - மதிக் கப்படும் கவிஞன் சிறந்த உலகக் கவிஞகை வாழ்கின்ற தையும் நாம் காண்கின்ருேம். எப்படி அவன் வாழ முடிகின்றது? சாதாரண எளிய மக்களுடைய வாழ்வைப் பின்னி எழுந்த கவிதைகளன்ருே அவனே வாழ வைக் கின்றன. எனவே மெய்க்கவிஞன் வெறும் காணுத உலகையும் கற்பனை உலகையுமே தன் உள்ளத்தால் உருவாக்குவதைவிட, சுற்றியுள்ள சூழலுக்குட்பட்ட மக்கள் வாழ்வையும், அவர் தம் பண்பாடு, நாகரிகம் முதலியவற்றையும் பின்னிய கவிதைகளையே உருவாக்க வேண்டும். சங்க இலக்கியங்களின் வழி இவ்வுண்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/154&oldid=812418" இலிருந்து மீள்விக்கப்பட்டது