பக்கம்:கொய்த மலர்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156. கொய்த மலர்கள் இருந்தமையின் அரசியலின் வழியும் அவற்றை வளர ஒட்டாமல் தடுத்திருக்கக் கூடும். எனவே இடைக் காலத் தில் பல காரணங்களால் நாடகமும் கூத்தும் நடனமும் இசையும் தமிழ் நாட்டில் நன்கு வளராது கின்று. விட்டன என்பது பொருந்தும். தமிழ் நாட்டில் நாடகத்துக்குக் கூத்து என்ற ஒரு பெயரும் உண்டு. 'கூத்துள் படுதல் என்றே. அதன் வழி இயங்கும் கிலே குறிக்கப் பெறும். தமிழ் நாட்டில் பல வகைக் கூத்துக்கள் இருந்தன என்பதைப் பழங்காலத் தமிழ் இலக்கியங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. தனிப்பட்ட வகையிலே அமைகின்ற கூத்துக்கள் பதிைேரு வகைப்படும் என்பர். நாடகம் முதலியன அப் பதிைேரு வகைக்கு அப்பாற்பட்டன. நாடகங்களின் கடுவிலே இக்கூத்துக்களுள் ஒன்றிரண்டு இணைக்கவும் பெறலாம். கடைச்சங்க காலத்தில் கூத்து நூல் என்ற ஒரு நூலே இருந்ததாக இறையனர் களவியல் உரையால் அறிய முடிகிறது. கூத்தாடுதல் என்ருல் மகிழ்ச்சி மிகுதல் என்றும் பொருள் உண்டு. எனவே, சோர்ந்திருக்கும் மக்கள் உள்ளத்தில் மகிழ்ச்சி மிகுதற்காக, உலகியல் முறையோடு சில கற்பனைகளையும் கலந்து நடிக்கப் பெறு வதே நாடகம் என்பது நன்கு அறியப்படும். தொல்காப்பியத்திவ் நாடகம் குறிக்கப் பெறுகின்ற தேனும், அக்காலத்தில் இருந்த நாடக நூல்களை நம்மால் அறியமுடியவில்லை. கடைச்சங்ககாலப் பாடல்கள் பல காடக அமைப்பிலேயே உள்ளன. கலித்தொகைப் பாடல்களில் சிலவற்றை அப்படியே நாடகமாக்கி கடிக்க முடியும். அகநானூறு போன்ற இலக்கியப் பாடல்களில் சில நாடக அமைப்பில் இருக்கின்றன. என்ருலும், அவற். றைத் தனி நாடக நூல் என்று கூறமுடியாது. சங்க காலத்தில் இருந்த பல நாடக நூல்களும் அவற்றை விளக்கிக் காட்டும் நாடகம் பற்றிய இலக்கண நூல்களும் இடைக்காலத்தில் மறைந்துவிட்டன; அல்லது மறைக்கப் பட்டன . எனவே இன்று நாடகமும் இசையும் பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/158&oldid=812427" இலிருந்து மீள்விக்கப்பட்டது