பக்கம்:கொய்த மலர்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ் 157, பல பழைய கருத்துக்களே நம்மால் அறிய முடியவில்லை. எனினும் சிலப்பதிகாரத்தினுலும் அதன் உரைகளாலும், அவைபற்றி ஓரளவு அறிந்துகொள்ள முடிகின்றது. சிலப்பதிகாரத்தை நாடகநூல் என்றே சொல்லு: வார்கள். அதை வெறும் காப்பியம் அல்லது இலக்கியம் என்று சொன்னலும், அதில் நாடகத்துக்கு வேண்டிய அத்தனை நல்ல அமைப்புக்களும் பொருந்தியுள்ளன. அதில் நடனம் பற்றியும் அந்த கடனம் நடக்கும் அரங்கு முதலியன பற்றியும் பல விளக்கங்கள் கூறப்படுவதோடு, நாடகத்துக்கு வேண்டிய பல வரிப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. கானல் வரியும், வேட்டுவ வரியும, குன்றக் குரவையும், ஆய்ச்சியர் குரவையும் நாடகங்களுக்கு ஏற்ற கல்ல பாடல்கள் அல்லவா! அவற்றை வைத்தே புதிதாக நல்லதொரு நாடகமே எழுதிவிடலாம். மற்றும் அந்த நூலில் புல பாத்திரங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதாக அமையும் இடங்களிலே நாடக அமைப்பே கையாளப் பெறுகின்றது. கோவலன் கண்ணகி பேச்சும், கவுந்தி அடிகள் மாதவி போன்ருர் பேச்சும், வழக்குரை காதை யும், பிறவும் நாடக அங்கங்களாகவே காட்சி அளிக்கின் றன. சிலப்பதிகாரத்தில் கதைப் போக்காய் ஆசிரியர் வாக்காகச் சொல்வதை எடுத்துவிட்டால் அப்படியே அது ஒரு நாடக நூல்ாக உருப்பெற்றுவிடும் என்பது உறுதி. எனவே சங்க காலத்தை ஒட்டிய இன்றைக்கு ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முன்பே நல்ல நாடகங்களும், அங் நாடக முறைக்கேற்ற உரைநடை, பாட்டு, இசை முதலியனவும் உறுப்பெற்று விட்டன எனக் காண முடி கின்றது. எனினும், அந்த நாடகமும் இசையும் தமிழ் காட்டு வரலாற்றின் இருண்ட காலத்திலே சற்று கிலே கெட்டன எனலாம். - இருண்ட காலத்துக்குப்பின் பல்லவர் தமிழ் காட்டை ஆண்ட காலத்திலும் நாடகமும் இசையும் போற்றப் பட்டன. இசைபற்றியும் அதன் வளர்ச்சி பற்றியும் தேவாரம் போன்ற தோத்திரப் பாடல்கள் கன்கு விளக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/159&oldid=812429" இலிருந்து மீள்விக்கப்பட்டது