பக்கம்:கொய்த மலர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைத்தறி ஆடைகள் 19 -லிருந்தே கைத்தறியை வாழவைக்க கினைத்தனர் அரசாங் கத்தார். எனவே ஆலைகளில் தயாராகும் துணிகளில் கஜத்துக்கு மூன்று பை வீதம் எடுத்து, அதைக் கைத்தறி வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும் என முடிவு செய்தனர். அதன்படி ஒரளவு கைத்தறித் துணிக்கு உதவிவந்ததோடு, வாங்குவோருக்குக் குறைந்த விலக்குக் கைத்தறி ஆடைகள் கிடைக்கும் வகையிலும் அரசாங்கம் அந்த உதவியை நன்கு பயன்படுத்தியது. இப்படி அரசாங்க உதவிபெற்று, ஒரளவு இக் கைத்தறித்துறை வாழ்ந்து வருகிறது. இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் கைத்தறி அவை இந்திய அரசாங்கத்தை 100 கோடி ரூபாய் கேட்டது. முழுதும் பெறவில்லை என்ருலும் ஒரளவு பெற்று இந்தத் திட்டத்தில் அந்த அவை கைத்தறி வளர ஆவன செய்து வருகிறது. இதற்கிடையில் இங்கு நான் முக்கியமாகக் குறிக்க வேண்டியது ஒன்று உண்டு, அதுதான் கூட்டுறவு முறை -யில் இக் கைத்தறியை வளர்த்த சிறப்பாகும். இக் கைத் தறி வளர்க்க அவ்வப்போது பல குழுக்கள். அமைக்கப் பெற்றன. அவற்றுள் கணுங்கோ (Kamungo) குழுவும் கார்வே (Karve) குழுவும் முக்கியமானவை. அவற்றுள் பின்னது 1958-ல் அமைக்கப்பட்டது. அது கைத்தறி யைக் கூட்டுறவு மூலமே வளர்க்க முடியும் என்று திட்டமாக நம்பி அரசாங்கத்துக்கும் தெரிவித்தது. சென்னை மாநிலத்தில் அதற்கு இருபதாண்டுகளுக்கு முன்பே தொடங்கிய இக் கூட்டுறவுக் கைத்தறி இயக்கம் கன்கு தொழிற்பட்டு வந்தது. ஆயினும் காட்டுப் பொது கிலே அதையும் தாக்கிற்று என்னலாம். என்ருலும் அதனுல் தளராது கிலேத்துப் பணியாற்றியதின் மூலம், இன்று இச் சென்னை மாநிலக் கூட்டுறவு நெசவாளர் சங்கம் சிறந்த தொண்டாற்றுகின்றது எனலாம். இச் சென்னை மாநிலக் கூட்டுறவு நெசவாளர் சங்கம் காட்டுக்குச் செய்யும் தொண்டு பெரிது. 1935-ல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/21&oldid=812448" இலிருந்து மீள்விக்கப்பட்டது