பக்கம்:கொய்த மலர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கொய்த மலர்கள் தொடங்கப் பெற்ற இது இன்று இவ்வளவு சிறக்க வளர்ந்துள்ளதைக் காண ஒவ்வொரு தமிழனும்-ஏன்? இந்தியனும் கூட மகிழத்தான் வேண்டும். 202 இலட்சம் தறிகளில் 981 கூட்டுறவுக் கழகங்களின் மூலம் இலட்சக் கணக்கான மக்கள் இச்சங்கத்தின் வழி காட்டுக்குப் பணி யாற்றுகின்றனர். இது தனக்குத் தேவையான நூல்களே ஆலைகளில் இருந்து பெறுகின்றது. எனினும் தனது முயற்சியாலே கூட்டுறவு நூற்புஆலை ஒன்றைத் திருநெல் வேலியில் அமைத்துக்கொண்டது. அதில் பதினேந்து இலட்சத்துக்கு மேல் பொருள் செலவிடப்பட்டிருக்கிறது. அத்துடன் நூலைத் தூய்மை செய்யவும் குறியிடவும் தக்க தொழிற்சாலைகளையும் ஆங்காங்கே அமைத்துள்ளது: இது செயற்கைப் பட்டு நூல் ஆலையை அமைத்து, அதன் வழியில் பல தறிகளேத் தொழிற்படுத்தியும் உள்ளது. மாதிரி நெசவுச் சாலேகளே அமைத்து அவற்றின் வழி: அடிப்படைக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழிகாட்டிப் பல வகையில் இத்துறையை இக் கூட்டுறவுச் சங்கம் வளர்த்து. வருகின்றது. இத்தனையும் இருந்தால் போதுமா? உற்பத். தியாகும் பொருள்களை விற்பனை யாக்குவதன்ருே வாணிப. வளர்ச்சிக்கு இன்றியமையாதது. ஆம்! அத்துறையில் இது பெரிதும் கருத்திருத்தியிருக்கிறது. சென்னை மாநிலத். தில் மட்டும் இது 301 கடைகள் கொண்டுள்ளது. பிற மாநிலக் கைத்தறிச் சங்கங்களுக்கும் விற்பனை செய் கிறது. இவற்றுடன் வெளிநாடுகளிலும் பல கடைகளே வைத்துள்ளது. இத்தனைக்கும் இடையில் தமிழ்நாட்டில் கைத்தறிபற்றி வாழும் மக்கள் ஏதோ வாழ்ந்தோம்" என்றுதான் வாழ்க்கையை கடத்துகிருர்கள். ஆகவே, அவர்தம் வாழ்க்கையை முன்னேற்றப் பற்பல வகைகளில் பொது மக்களும் அரசாங்கமும் தயங்காது உடனே ஆவன செய்யத்தான் வேண்டும். மக்கள் அனைவரும்: கைத்தறிகளையே வாங்க முன்வரவேண்டும். நாகரிகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/22&oldid=812450" இலிருந்து மீள்விக்கப்பட்டது