பக்கம்:கொய்த மலர்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைத்தறி ஆடைகள் 21 என்று அநாகரிக வெறி பிடித்தவர்களுக்கு உள்ளும் புற மும் காட்டும் வகையில் உடையைத் தயார் செய்யவில்லை என்ருலும் கைத்தறி நாகரிக மக்கள் வாழ்வுக்குத் தேவை யான பலப்பல வண்ண உடைகளேத் தயாரிக்கின்றது என்பதை இதோ உங்கள் முன் இருக்கும் கண்காட்சி யின் மூலமே நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே இனி அனைவரும் கைத்தறித் துணிகளே வாங்க வேண்டும் என உறுதி கொள்ளுங்கள். அரசாங்கமும் இன்னும் எத்தனையோ வகையில் உதவி செய்ய வழி இருக்கிறது. இத்துறையில் பல காட் கள் உழைத்து அனுபவம்பெற்ற அறிஞர்கள் என்னென்ன செய்யவேண்டும் எனக் கூறியுள்ளார்கள். நானும் இங்கே சில சொல்லி என் உரையை முடித்துக்கொள்ளக் கருதுகிறேன் இதோ ஒருசில கான் குறிப்பிட விரும்புவன: 1. ஆலைகளிலிருந்து இன்னும் குறைந்த விலக்குத் தறிகளுக்கு நூல்கள் கிடைக்குமாறு ஏற்பாடு செய்தல் வேண்டும். 2. இன்றைய பாவு அமைக்கும் முறையில் மாற்றம் காண வழி தேட வேண்டும். பாவு தயார் செய்ய மனித கேரம் அதிகம் வீணுகின்றது, பலர் ஒரு பாவு அமைக்கத் தேவைப்படுகின்றனர். சில வேலைகளில் பலர் இரண்டு நாட்கள் கூட இருக்க வேண்டியுள்ளது. எனவே, அரசாங்கம் இதைக் குறைக்கும் வழியையும் ஆராய்ந்தோ தக்கவர்களே. ஏற்படுத்தியோ, பரிசு கொடுக்க முன்வந்தோ புதுப்புது முறையில் 'பாவு' தயாரிக்க வழி காண வேண்டும். 3. நூல் நுழைகோல் (reed) அமைப்பு முறையில் கைத்தறி பெரும் மாற்றம் பெறும் வகையில் வழிகாண வேண்டும். 2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/23&oldid=812452" இலிருந்து மீள்விக்கப்பட்டது