பக்கம்:கொய்த மலர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வண்ண ஆடைகள்* மனிதன், விலங்கு பறவை முதலியவற்றிலிருந்து வேறு படுகின்ருன். பிறவற்றிற்கு இல்லாத ஒரு தனி உணர்வு-பகுத்தறிவு-கல்லதையும் கெட்டதையும் பாகு படுத்திக் காணும் கல் அறிவு-அவனிடம் இருக்கிறது என்பர். ஆரும் அறிவினைப் பெற்றதுதான் அவனைப் பிறவற்றிலிருந்து பெரியவனக்கியது உண்மையே! எனினும் இன்று மனிதன் அந்த அறிவினை இழந்து, விலங்கினும் கேடான வாழ்வுவாழத் தொங்கி விட்டான் என்று சமயத் தலைவர்களும், அரசியல் அறிஞர்களும், பிறரும் நாள் தோறும் பேசிக்கொண்டே இருக்கின்றனர். அவனுடைய அகநலம்-உள்ளுணர்வு-நிலை கெட்டு விலங்குணர்ச்சி யைப் பெறுகின்றது என்பர். என்ருலும் மனிதனைப் பிறவற்றினின்றும் வேறுபடுத்திக் காட்டும் சிறந்த ஒன்று ஆடையே யாகும். ஆடை, தான் அணியப் பெற்ற மனிதனே உயர்வுடையவகை உலகுக்குக் காட்டுகின்றது. உள்ளம் கிலேகெட எண்ணும் போது, அவ்வுள்ளமே “இத்தகைய உடையொடு உலவும் நாம் கிலே கெடலாமா? என்ற உணர்வை ஊட்டத்தான் செய்கிறது. எனவே மனிதனை மனிதகை வாழவைக்கும் முயற்சியில் ஆடைக்குப் பெரும் பங்கு உண்டு. அதேைலயே 'ஆடையில்லா மனிதன் அரை மனிதன்' என்ற பழமொழி காட்டில் பிறந்தது. ஆடை மனிதனுக்கு நெடுநாட்களாகவே உரிய ஒரு பொருள். அவன் தன் அறிவு பெற்ற காலத்திலேயே

  • சேலம் வண்ணக் களஞ்சியத்தார் அவையின் வெள்ளி மலரில் வந்தது. (பிப்ரவரி 60)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/25&oldid=812454" இலிருந்து மீள்விக்கப்பட்டது