பக்கம்:கொய்த மலர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 கொய்த மலர்கள் கெடாத வகையில் விளங்கியதையே மாசு இல் என்ற அடைமொழியால் சிறப்பிக்கின்றனர். காம்பு துகிலவை' என்று பெரியாழ்வாரும் பின்னட்களில் நன்கு கூறி யுள்ளமை அறிகிருேம். ஆடைக்கு இருமருங்கும் கரை யிட்டார்கள் என்பதை 'இரு கோட்டு அறுவையர் (நெடு 85) என்ற நக்கீரர்தம் அடியால் அறிகிருேம். எனவே மக்கள் ஆடைகளுக்குப் பல வண்ணங்களினலே இரண்டு பக்கங் களிலும் கரையிட்டார்கள் என்பது நன்கு தெரிகிறது. ஆடையின் இருமருங்கும் இட்ட கரைகளைப்பற்றிப் பின் வந்த சுந்தரர் கூறிய அடிகள் ஈண்டு கினேவிற்கு வருகின்றன. ஒன்பதாம் நூற்ருண்டில் நாகைப்பட்டினம். சிறந்த துறைமுகப் பட்டினமாக விளங்கிற்று. ஆடைகள் பல்வேறு வண்ணக் கரைகளோடு ஏற்றுமதி இறக்குமதி செய்யப்பட்டன. அந்த நகரில் அவற்றின் அழகுகளே யெல்லாம் கண்ட சுந்தரருக்கு அவை தேவை என்ற உணர்வு உண்டாயிற்று. உடனே ஆண்டவனே நோக்கிப் பாடினர். பல்வேறு பொருள்களைக் கேட்டுக்கொண்டே வந்த சுந்தரர். . . காம்பிளுெடு நேத்திரங்கள் பணித்தருளல் வேண்டும் கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே' என்று கேட்டார். இருவகை ஆடைகள் அவர் உள்ளம் கவர்ந்தன. ஒன்று காம்பு, மற்ருென்று கேத்திரம். காம்பு என்பது பற்றி மேலே சங்க இலக்கியத்திலும் கண்டோம். காம்பு என்பது கரும்பின் கனுப்போன்று லேமும், பச்சையும், பிற வண்ணங்களும் கலந்து அமைத்த கரையாக வேண்டும். கேத்திரம்' என்பது. இன்றைய மயில் கண் போன்றது. எனவே இவ்வாறு பல வண்ணங்கள் கொண்டு கணுக் கணுவாகவும், கண் கண்ணுகவும் அமைத்த கரைகளே உடைய ஆடைகளே அக்காலத்து மக்கள் விரும்பி உடுத்தார்கள் என்பது தெளிவு. மற்றும் உருத்திராட்சக் கரை என்று சொல்லப்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/28&oldid=812463" இலிருந்து மீள்விக்கப்பட்டது