பக்கம்:கொய்த மலர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ண ஆடைகள் 27 பெறுகின்ற கொட்டைக் கரையிட்ட பட்டாடைகளும் இருந்தன என்பதை, கொட்டைக் கரைய பட்டுடை நல்கி' (பொருந. 155) என்றும் சங்க காலத்து வாழ்ந்த முடத்தாமக் கணணியார் என்ற பெண்பாற் புலவர் பாடியுள்ளார். இவ்வாறு பல வண்ணங்கள் வழி ஆடைகள் அழகு செய்யப்பட்டன. கிற்க. முல்லைப் பாட்டில் வரும் குறிப்பு மற்ருெரு வகை ஒப்பனையையும் நினைவூட்டுகின்றது. மத்திகை வளைஇய மறிந்துவீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க............... யவனர். (முல்லை. 59-61) என்ற அடிகள், காவல் மாக்கள் அங்கி என்னும் மெய்ப்பை அணிந்திருந்தார்கள் எனக் காட்டுகின்றது. அதில் மத்திகை வளைய இருந்ததாம். மத்திகை என்ப தற்குப் பூமாலை என்று பொருள் தருகிறது. பிங்கல நிகண்டு. எனவே இக்காலத்துப் பூ வேலை போன்று (Embroidery) அழகிய வளைந்த வண்ண மலர் வேலைகள் கொண்ட மேல் அங்கியை அவர்கள் அணிந்து கொண் டார்கள் என்பது பொருந்தும். இன்றும் அரசர்களுக் கும் அமைச்சர்களுக்கும் முன்னேடிகளாக வருவோர் அத்தகைய ஆடைகளை அணிந்து தம் பின்னல் வருபவரை அறிமுகப்படுத்துவதைக் காண்கிருே மல்லமோ! அத்தகைய அழகிய ஆடைகளே, வெறும் வண்ண ஒளியுடன் கண்ணுக்கு விருந்தாக அமைவனவாக மட்டும் வைத்திருக்க விரும்பவில்லை அக்கால மகளிர். அத்தகு அழகிய வண்ண ஆடைகளுக்கு மகளிர் மணம் ஊட்டி ஞர்கள் எனவும் அறிகிருேம். மதுரை மா நகரில் மகளிர் அந்த வண்ண ஆடைகளுக்கு-மெல்லிய நூலிழைகளால் ஆகிய ஆடைகளுக்கு-மணம் ஊட்டினர்கள் என்பதை மாங்குடி மருதனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/29&oldid=812465" இலிருந்து மீள்விக்கப்பட்டது