பக்கம்:கொய்த மலர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கொய்த மலர்கள் மென்நூற் கலிங்கம் கமழ் புகை மடுப்ப பெண்மகிழ் வுற்ற பிணைநோக்கு மகளிர் (மதுரை. 554-551 என்கிருர். அந்த மணநிலையை இன்று சில மணங்களை (செண்டு) ஆடைக்கு ஊட்டுவதன் மூலம் நம்மால் அறிய முடிகிறது. முழுவண்ணங்களை ஆடைகளுக்கு ஊட்டுவதோடு பல்வேறு வகைக் கரைகளை ஆடைகளுக்கு அமைப்ப தோடு-ஆடையி னிடையில் பலப்பலப் பூ வேலைகளையும் (Printing) செய்துள்ள வேலைப்பாடும் சங்க காலத்தில் இருந்தது எனக் காண்கின்ருேம். கற்றிணைப் பாடல் ஒன்று, பல்வகைப்பட்ட புள்ளிகளே உடைய ஓர் ஆடை யைக் குறிக்கிறது. அந்த வண்ண ஆடையின் சிறப்பை புகாப் புகர் கொண்ட புன்பூங் கலிங்கம்' (நற். 90) என்று காட்டுகிறது அது. எனவே முழு வண்ணம் திட்டுவதோடு, ஆடைகளில் வண்ணப்புள்ளி அமைத்து அழகுபடுத்தும் சிறப்பும் அக்காலத்தில் நன்கு சிறந்து இருந்தது. இனி, இவ்வாடைகளைத் தயார் செய்யும்போதும் அழுக்கினேப் போக்கித் தூய்மையாக்கும்போதும் கஞ்சி யிடும் வழக்கம் உண்டு என்பதை, 'காடிகொண்டு கழுவுறு கலிங்கத்துத் தோடமை தூமடி' - - (நெடு. 134-35). என்று நெடுகல் வாடை காட்டுகின்றது. அதையே குறுந்தொகை, 'நலத்தகை புலத்தி பூசை தோய்த்துஎடுத்த தலைப்புடைப் போக்கித் தண்கலத் திட்ட நீரில் பிரியாப் பழுஉத்திரி' (குறுந்.330) எனக் காட்டுகிறது. எனவே ஆடையையும் நூலேயும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/30&oldid=812468" இலிருந்து மீள்விக்கப்பட்டது