பக்கம்:கொய்த மலர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் 37 இக்காலத்துக்கும் அடுத்துத் தெளிவாக காணும் பல்லவர் காலத்துக்கும் இடையே தமிழக வரலாற்றிலேயே ஓர் இருண்டகாலம் . - தொடக்கம் கி. பி. ம். கால எல்லே கி. மு. மூன்ரும் நூற்ருண்டு தொடங்கிக் கி. பி. மூன்ரும் நூற்ருண்டின் தொடக்கம் வரை அமை கின்றது எனக் கொள்வது பொருந்தும் என கினைக்கி றேன். சைவம் என்பது யாது? இனி, சைவம் என்பது என்ன எனக் காண வேண் டும். அறிஞர் பலர் அதுபற்றிக் கண்டும் காட்டியும் உள்ளனர். சிவ சமபந்தமுடையது சைவம். சிவம் யாது? எத்தகையது? சைவ சித்தாந்த சமாச அன்பர்களுக்கு அது பற்றிய விளக்கம் தேவையில்லே. சிவனே இடையருது எண்ணி எண்ணி உள்ளத்து உணர்வால் போற்றி வழி படும் புண்ணிய வினையே வாழ்வின் பயன் எனப் பல ஆண்டுகளாகப் பல அரும்பெரும் புலவர்கள் காட்டிவரும் சிவனெறிச் சிறப்பினே என்னல் காட்ட முடியும் கொல்? இயலாது! எனினும், கொண்ட பொருளுக்கு ஏற்ப ஓரிரண்டு காட்டி அமைகின்றேன். 'சிவம் என்ற சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. நன்மை என்பது ஒரு பொருள். முத்தி என்ற பொருளும் உண்டு. செம்மை என்றும் சொல் லுவர். சிவன் என்னும் காமம் தனக்கே உரிய செம் மேனி அம்மான்’ என்ற சிவனேப் பற்றிய அடியும் எண்ணத்தக்கது. எனவே, செம்மை என்பது எதுவோ டஅஆனத்துக்கும் அப்பாலாய் கின்று அனேத்தையும் ஆக்குவது எதுவோ-உலக உயிர்களுக்கு நன்மை தருவது எதுவோ- எல்லாரும் இன்புற்றிருக்க கினைப்பது கொ. ம-3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/39&oldid=812484" இலிருந்து மீள்விக்கப்பட்டது