பக்கம்:கொய்த மலர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 கொய்த மலர்கள் கிறது. இச் சக்தி வழிபாடு சங்ககாலத்தை அடுத்து எழுந்த சிலப்பதிகாரத்தில் நன்கு போற்றப்பெறுகிறது "கானமர் செல்வி அருளின் என்ற அகநானூற்றுக்கு. விளக்கமாக வேட்டுவ வரியே அமைந்துள்ளது. 'சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்தி செங்கண் அரிமான் சினவிடைமேல் கின்ருயால் கங்கைமுடிக் கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாகி மறை ஏத்தவே நிற்பாய்' என்று அச்சத்தியாகிய கொற்றவையை முன்னிறுத்திப் பாடி, வேட்டுவராடும் கூத்துட்படும் நிலயை இளங்கோ வடிகள், "ஆய்பொன் அரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப மாயஞ்செய் வாளவுணர் வீழ நங்கை மரக்கால்மேல் - வாளமலை ஆடும் போலும்: மாயஞ் செய் வாளவுணர் வீழ கங்கை மரக்கால் - மேல் வாளமலை ஆடுமாயின் காயா மலர் மேனி ஏத்தி வானேர் கையெய் மலர்மாரி காட்டும் போலும்!” என விளக்கிக் காட்டியுள்ளார். இவ்வாறு போற்றப் படும் அம்மையின் மகனே முருகன் என்பதைத்தான் நக்கீரர் மால்வரை மலைமகள் மகனே (256-57) என்றும், "வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ (359) என்றும் 'இழையணி சிறப்பிற் பழையோள் குழவி (359) என்றும் பாராட்டுகின்ருர். அவர் வாக்கின் வழி உமையம்மையார் இமவான் மகளாகிய வரலாறும், கொற்றவையாகிச் சிறந்த பெருமையும், பிறவும் நன்கு விளங்குகின்றன. வன்ருே! சங்க நூல்களில் சிவன் இனிச் சிவபெருமான் பற்றிச் சங்க காலத்தில் வந்த இடங்களைக் காணலாம். சிவபெருமானுக்கு உகந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/48&oldid=812504" இலிருந்து மீள்விக்கப்பட்டது