பக்கம்:கொய்த மலர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் 45 இத் திருமால் கிடக்கும் நிலைகண்டு மேலே செல் வோம். அண்மையில் உள்ள காஞ்சியில் திருவெஃகாவில் திருமால் பள்ளி கொண்டுள்ளார். அதைக் காண்கிருர் புல்வர். இயற்கையோடு கடவுள் வாழ்வு பின்னப் பெறு வது புலப்படுகிறது. பாம்புப் பாயலில் திருமால் கண் வளரும் காட்சி, புலவருக்குக் கரிய மலையையும் அதன் மேல் துயிலும் யானையையும் கினைப்பூட்டுகிறது. மலே மீது காந்தள் நிறைந்துள்ளது. அந்த இயற்கை எழி லோடு திருவெஃகாவின் திருமால் காட்சியைப் பிணைக் கின்ருர் புலவர். இதோ அவர் அடிகள்: காந்தளங் சிலம்பில் களிறு படிந்தாங்கு பாம்பணைப் பள்ளியுள் அமர்ந்தோன்' (பெரும், 371-73) இவ்வாறு பல இடங்களில் திருமால் போற்றப் படுகின்ருர். நாம் இந்த அளவோடு அவர் பற்றிய குறிப்பை நிறுத்தி மேலே செல்வோம். சக்தி வணக்கம் உமை அம்மையார் சங்க இலக்கியங்களிலே சிவ ைேடு சார்த்தியே பேசப்படுகின்ருர். அன்றித் தனி யாகக் காணும்போது காடுறை தெய்வமாக-துர்க்கை யாகக் காட்டப் பெறுகின்ருர். கானமர் செல்வி அருளின் (அகம். 345) என அக் கொற்றவையின் அருள் நலம் பாராட்டப் பெறுகின்றது. ஒருகுழை ஒருவன் (கலி. 26) எனவும், ஈர்ஞ்சடை அந்தணன் உமை அமர்ந் துயர்மலை இருந்தனன் (கலி. 35) எனவும் அம்மை இறைவனெடு சேர்த்தே பேசப்பெறுவதையும் காணமுடிகின்றது. சிவ வழிபாடே அன்றிச் சத்தியாகிய அம்மை வழிபாடும் அச் சங்க காலத்தில் இருந்தது என்பதும், அவ் வழிபாடு தனித்தமுறையிலும் சிவனெடு சேர்த்தும் ஆற்றப் பெற்றது என்பதும் கன்கு தெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/47&oldid=812502" இலிருந்து மீள்விக்கப்பட்டது