பக்கம்:கொய்த மலர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 கொய்த மலர்கள் திலும் சிவனையும் திருமாலையும் சேர்த்துப் பிணத்துப் பார்த்த பேரறிஞர்கள் வாழ்ந்திருக்கிருர்கள். மாலைக் காலம் மகிழ்ச்சிக் குரியது. செவ்வானம் கோடிட்டுக் கதிரவன் மறைந்த காட்சியை அழகுபடக் காட்டுகிறது. அதே வேலையில் கடல் தன் கரிய அலைகளே வீசுகின்றது. குமரி முனையிலோ அன்றி மேலக் கடற் கரையிலோ அமர்ந்து மாலையின் இன்பத் தோற்றத்தில் தன்னேப் பறிகொடுத்த புலவர் நன்கு துய்த்து கிற்கின்ருர். அப்போது அவர் உள்ளத்துச் சிவனும் திருமாலும் வந்து தோன்றுகின்றனர். செக்கர் வானம் சிவனுடைய தோற் றத்தை கினேப்பூட்டுகிறது. கரிய கடல் நீலமேக நெடும் பொற்குன்றமாகிய திருமாலை கினைப்பூட்டுகிறது. இருவரும் இணைந்து கிற்கும் காட்சியும் அவருக்குத் தெரிகின்றது. இருவரும் அருந்திறல் பெற்ற கடவுளர். இருவரும் இணைந்தே உலகினைப் புரக்கின்றனர். இத்தனை யும் எண்ணிப் பார்க்கின்ருர் மதுரைக் கண்ணத்தனர் என்ற பெரும் புலவர். அவர் வாய் பாடுகின்றது: வெருவரு கடுந்திறல் இருபெருந் தெய்வத்து உருவுடன் இயைந்த தோற்றம் போல அந்தி வானமொடு கடலணி கொளாஅ வந்த மாலை' (அகம். 360) என்றது அவரது வாய். இவ்வாறு இருபெருங் தெய்வத்தையும் இணைத்து ஒன்றிய சமய உண்மையைக் கைக்கொண்டனர் சங்க காலச் சைவர். இங்கு இரு பெருந் தெய்வ நிலையைச் சத்தியும் சிவனும் இணைந்தங்லை என்று கொள்ளவும் இடமுண்டு, உமையும் கரியநிறம் உடைமையின் கரிய உருவைத் திருமாலாகவே கொண்டு ஆழ்வார் காட்டியபடி 'இரண்டுருவம் ஒன்ருய் இயைந்து கின்ற காட்சியைக் கொள்வதே சிறப்புடையதாகும். இவ்வாறு சிவனும் மாலும் இயைந்த நெறி சங்க காலச் சமய நெறி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/46&oldid=812500" இலிருந்து மீள்விக்கப்பட்டது