பக்கம்:கொய்த மலர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 48 கொய்த மலர்கள் ஐயிரு தலையின் அரக்கர் கோமான் தொடிப்பொலி தட்க்கையின் கீழ்ப்புகுந்து அம்மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல” (கலி. 38, 1-5) என்று இராவணன் வரலாறு மட்டுமன்றிச் சிவன் மேருவை வில்லாக வளைத்த வரலாறும் அப்பாட்டில் குறிப்பிடப் பெறுகின்றது. -மு.பபுர எரிப்பு மேருவை வளத்த வரலாறு ஈண்டுக் குறிப்பாகக் காட்டப் பெறினும், மற்ருெரு சங்கப் பாடலில் நன்கு விளக்கமாக எடுத்துக் காட்டப்பெறுகின்றது. திரிபுரங் களே வென்ற வரலாறே மலையை வில்லாக வளைத்த வரலாறு. அதற்கு ஒரு பெருமலையே வில்லாக வளைக் தது. பெரும்பாம்பே நானக கின்றது. அவ் வில்லிடை காணேற்றி அம்பு காட்டி மூன்று புரங்களையும் எரித்தான் சிவபெருமான் என்பதை, ஓங்குமலைப் பெருவில் பாம்புநாண் கொளீஇ ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப் பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த கறைமிடற்று அண்ணல் காமர் சென்னி பிறைநுதல் விளங்கும் ஒருகண் போல” (புறம். 56) என மதுரை மருதன் இளநாகனர் நன்கு காட்டுகின்ருர். இதில் மூவெயில் உடற்றிய வரலாறு மட்டுமன்றிச் சிவனேக் கறைமிடற்று அண்ணலாகவும், பிறை அணிந்த வகைவும், நுதல் வழி நாட்டத்து இறையோவுைம் காணும் வரலாறுகளும் அமைந்துள்ளன. மற்றும், இச் சிவன் மூவெயிலை உடற்றிய காரணத் தையும், அவனுடைய கணிச்சிப் படையையும் கலித் தொகை காட்டுகிறது: "மடங்கல்போல் சினை இய மாயஞ்செய் அவுணரைக் கடந்தடு முன்பொடு முக்கண்ணுன் மூவெயிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/50&oldid=812510" இலிருந்து மீள்விக்கப்பட்டது