பக்கம்:கொய்த மலர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 கொய்த மலர்கள பாலுக் கப்பாலாய் கின்று பஞ்ச பூதங்களையும் தோற்று. வித்து இயக்கும் ஒப்பிலி அப்பகைவும் விளங்குகின்ருன். அடியவர்கள் பொருட்டு அவன் விரும்பிய வண்ணம் காட்சி வழங்கும் அதே ஆண்டவன், கல்லாதார் மனத் தணுகாக் கடவுளாக நிற்பதோடு, கற்றவரும் எளிமையில் காணமுடியாது அப்பாலுக்கப்பால் கிற்கின்ருன் என் பதை எச்சமய நூலாரும் உற்று உணர்ந்து ஓதி வைத் துள்ளார்கள். மற்றும் அம் முழுமுதற்பொருள் உலகம் அனைத்தும் தோன்றுதற்கு முதற் காரணமாய ஐம்பெரும் பூதங்களே ஆக்கி அவற்றுடன் தானும் கலந்து அலகிலா விளையாடலைப் புரிகின்ருன் எனவும் காட்டுவர். இவற்றை யெல்லாம் தொகுத்து, " நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும் பொடு ஐந்துடன் இயன்றிய மழுவாள் நெடியோன் தலைவனுக" (மதுரை. 453-55). என்று மாங்குடி மருதனர் மழுவைத் தாங்கிய சிவ னுடைய முடிவிலாற்றலுடைமையை நன்கு காட்டுவது. அறியற் பாலதாகும். இவ்வாறு யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்கும் கடவுளே-உள்குவார் உள்ளத்து உள்கும் வடிவாய்த் தோன்றி வரமளிக்கும் ஆண்டவனே.அடியவர்கள் ஒருங்கு கூடிப் பலவிடங்களில் தொழுது வந்தனர். கடவுள் வழி' பாட்டிற்கெனத் தனித்த இடங்கள் அமைக்கப் பெற்றி றிருந்தன. அ ைவ க ள் இயற்கைச் சூழல்களோடு அமைந்து இருந்தன. மக்கள் அவ்விடத்தே காலமறிந்து சென்று ஆடிப்பாடிப் பரவிப்போற்றிப் புகழ்ந்து வாழ்த்தி வரம் பெற்ருர்கள். பெறற்கரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும் பொய்யா மரபில் பூமலி பெருந்துறை செவ்விகொள் பவரோடு அசைஇ-அவ்வயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/54&oldid=812518" இலிருந்து மீள்விக்கப்பட்டது