பக்கம்:கொய்த மலர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் 51 ஒரு குழை அணிந்தவன் எனக் காட்டப்பெறுகின்ருன். அத்துடன் அவனுக்கு ஏறு வாகனமாக இருப்பதோடு கொடியாகவும் இருககின்றது. இரண்டையும் பிணித்த பெருங்கடுங்கோ, "ஒரு குழை ஒருவன் போல்' எனவும், "ஆனேற்றுக் கொடியோன் போல்' எனவும், தமது பாலைக்கலியுள் (36) பொருள் பொதிந்து காட்டு கின்ருர். இன்னும் கடவுள் வாழ்த்துப் பாடல்களுள் இவ்வுண்மைகள் பேசப் பெறுகினறன. அவை காலத் தால் பிந்தியன என்பவாகலின அவற்றை விட்டு மேலே செல்வோம். இச் சிவ பெருமான் சடையுள் கங்கையைக் கரந்த வரலாறும் சங்க இலக்கியத் தில் காணமுடியும். அக் கங்கை இமயத்து உச்சியிலிருந்து-இமையவர் வாழும் அப் பெருமலை உச்சியிலிருந்து-கிழக்கிறங்கி வான் கிழிதது ஓடிவரும் பேராறு என்பதையும் அன்றே காட்டியுள்ளனர் புலவா. 'பிறங்கு நீர் சடைக் கரந்தான்” (கலி 150) என்று இவன் கங்கையைக் கரந்த வரலாறு கூறப்பெற்றுள்ளது. அக் கங்கை இழிதரும் சிறப்பினே, * " இமையவர் உறையும் சிமையச் செவ்வரை வெண்திரை கிழித்து விளங்குசுடர் நெடுங்கோட்டுப் பொன்கொழித்து இழிதரும் போக்கருங் கங்கைப் பெருநீர்' (பெரும் பாண். 429-31) என்று பத்துப்பாட்டு அடிகள் காட்டுகின்றன. சிவனே தலைவன் இவ்வாறு வேண்டுவார்க்கு வேண்டிய வகையிலே வடிவு காட்டி, ஆலமர் செல்வய்ை-கறைமிடற் றண்ண லாய்-முக்கண் முதல்வய்ை-பிறை சூடிய பெம்மாளுய் விளங்கி, அணுவுக்கு அணுவாய் கின்ற அதே சிவன், அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/53&oldid=812516" இலிருந்து மீள்விக்கப்பட்டது