பக்கம்:கொய்த மலர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கொய்த மலர்கள் நன் மகப்பேறு எய்தற்குக் கடவுளே வணங்குவர் என்பதையும் அவ் வணக்கத்தின் வழிப் பேறுபெற்றுச் சிறந்தார்கள் என்பதையும், ' குன்றக் குறவன் கடவுட் பேணி இரந்தனன் பெற்ற எல்வளைக் குறுமகள் ' என்ற ஐங்குறுநூற்று (257) அடிகள் எடுத்துக் காட்டு கின்றன. தலைவி தம் குலதெய்வத்துக்குச் சிறக்க ஆற்றும் வழிபாட்டு முறையை அதே நூல் நன்கு காட்டுகின்றது: ' குன்றக் குறவன் காதன் மடமகள் மன்ற வேங்கை மலர்சில கொண்டு மலையுறை கடவுள் குலமுதல் வழுத்தி தேம்பலிச் செய்த ஈர்நறுங் கையின் ' (ஐங். 259) என்று, அவர்கள் மலர் தூவி வழிபட்டதை இவ்வடிகள் காட்டுகின்றன. . . அகப்பொருள் துறைப் பாடல்கள் சங்க காலத்தில் சிறந்து கின்றன; பெரும்பாலான அகப் பாடல்களே. அவற்றுள் காதல் ஒழுக்கமே சிறந்ததாகப் பேசப் பெறு கின்றது. அக் காதல் ஒழுக்கத்துக்கு இடையில்தாம் மேலே காம் கண்ட கடவுள் உண்மை பற்றிய பல காட்சி கள் காட்டப் பெறுகின்றன. அகமும், ஐங்குறுநூறும், கலியும், கற்றிணையும் முழுக்கமுழுக்க அகத்தைப் பற்றிப் பாடுவன. அவற்றுளெலாம் கடவுள் குறிப்பும் காட்டப் பெறுவ தறிந்தோம். குறுந்தொகை என்ற அகநூலில் காணும் கடவுள் வழிபாட்டு வகையில் ஒன்றிரண்டு கண்டு மேலே செல்வோம். - . கடவுள் தவறு செய்பவரைத் தண்டிப்பார் என்ற அச்சம் காட்டில் நன்கு கிலவிவந்தது. ஒரு தலைவன் தன் தலைவியை விரைந்து வந்து மணப்பதாகக் கூறினன். பின் ஏதோ காலம் தாழ்க்கிறது. அதற்குள் தலைவி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/56&oldid=812522" இலிருந்து மீள்விக்கப்பட்டது