பக்கம்:கொய்த மலர்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 கொய்த மலர்கள் பெறற்கரும் தொல்சீர்த் துறக்கம் ஏய்க்கும் பொய்யா மரபில் பூமலி பெருந்துறை (பெரும். 388: 89) என்ற அடிகள் நமக்குக் காட்டுகின்றன. எனவே, சங்க காலச் சைவநெறியில் இன்று காணும் அத்தனை உண்மை களும் அடங்கி இருந்தன என்பது தேற்றம். இன்னும் சிவனைப் பற்றியும் அவன் ஆடல், இடம் முதலியன பற்றியும் பலப்பல பாடல்கள் சிறக்கப் பாராட்டுகின்றன. அவன் சுடுகாட்டில் ஆடுவது பற்றி யும், கொடு கொட்டி ஆடுதல் பற்றியும். புலித் தோலாடை பற்றியும், இவை போன்ற எத்துணையோ உண்மைகள் பற்றியும் பலப்பல வகைகளில் சங்க இலக் கியங்கள் குறிக்கின்றன. முருகனைப் பற்றியும், அவனது இரு மனைவியரைப் பற்றியும், அவன் படைவிடுகள் பற்றியும், பிறவரலாறுகள் பற்றியும் கூறும் பாடல்கள் பலப்பல. தெய்வத்திற்குக் கல் உருக் கொடுத்தல் பற்றி யும், தெய்வத்திற்குக் கையுறை கொடுத்தல் பற்றியும், கிலம் தானம் செய்தல் பற்றியும், உயிர்ப்பலியும் பூப் பலியும் செய்தல் பற்றியும், மஞ்சள் இட்டுப் பூ அணிதல் பற்றியும், தெய்வத்தைச் சுட்டிச் சபதம் செய்தல் பற்றியும், வணங்கி வஞ்சினம் உரைத்தல் பற்றியும், தெய்வத்தை வேண்டிக் குழந்தை பெறுதல் பற்றியும், தெய்வ வழிபாட்டுமுறை பற்றியும், இவைபோன்ற பிற பற்றியும் பலப்பல சங்கப் பாடல்கள் எடுத்துக் காட்டு கின்றன. அவற்றையெல்லாம் அறிந்தோர் வாய்ப்பு உள்ள வேளையில் கற்று, கண்டு, நலன் பெற்றுச் சிறக்க எனக்கூறி மேலே செல்கின்றேன். சங்க காலத்தில் இறைவனைக் குறிக்க வருகின்ற சொற்கள் மிகச் சிலவே. இறைவன் என்ற சொல் கடவுளேக் குறிக்க அக் காலத்தில் பயன்படினும், அது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/62&oldid=812536" இலிருந்து மீள்விக்கப்பட்டது