பக்கம்:கொய்த மலர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் 61 பெரும்பாலும் நாடாளும் மன்னனைக் குறித்த சொல்லா கவே கொள்ளப்பட்டது. வள்ளுவர் இறை மாட்சி" என்ற அதிகாரமும், மக்கட்கு இறை என்று வைக்கப் படும் என்ற அவர் வாய்ச் சொல்லும் இக்கருத்தை வெளிப்படையாகக் காட்டும். இறைவன் பொருள் சேர் புகழ்' என்று அவரே கூறுவதல்ை ஒருசில இடங்களில் இறைவன் தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியாகிறது. எனினும், வேறு சில சொற்கள் அவ்விறையைக் குறிக்க விருக்கின்றன. அவை கண்டு அமைவோம். சங்க காலத்தில் இறைவனைக் குறிக்கப் பெரும் பாலும் தெய்வம், கடவுள் என்ற சொற்களே பயன் பட்டன. இயவுள் என்ற சொல்லும் வருகிறது. 'பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் (திருமுரு, 274) என்று நக்கீரர் குறிக்கின்ருர். இயவுள் என்பதற்குத் தெய்வம் என்ற பொருள் உள்ளதாகப் பிங்கல நிகண்டால் அறிகிருேம். அவன் மெய்சேர் புகழ் உடையவன் ஆனமையின்-தலைவன் ஆயினமையின்.இப் பெயரால் அழைக்கப் பெறுகின்ருன் போலும் திவாகரம் 'இயவுள்' என்பதற்குப் புகழாளன்' என்று பொருள் தருகின்றது. இயவுள் யானே' என்ற அகநானூற்று (29) அடி தலைமை என்ற பொருளேத் தருகின்றது. எனவே, மெய்ப்புகழுடைய இறைவன்-தலைமை உடைய இறைவன்-இயவுள் என அழைக்கப் பெறுகின்ருர். இயவுள் என்பதற்கு அனைத்தினும் உள்ளுக்கு உள்ளாய் இருந்து இயக்குபவன் எனவும் பொருள் கொள்வார். "கடவுள்' என்ற சொல் எப்படி அனத்தையும் கடந்த தன்மையை விளக்குகின்றதோ-அதேபோன்று 'இயவுள்' என்பது அனைத்தினும் இயங்கும் தன்மையை விளக்குகின்றது, அவன் அப்பாலுக்கு அப்பால் இருப்ப தோடு அணுவுக்கு அணுவாகவும் இருக்கின்றமையின்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/63&oldid=812538" இலிருந்து மீள்விக்கப்பட்டது